சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், நவம்பர் 7-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

அம்பத்தூர்

  • பழனியப்பா
  • புதூர்
  • ஏ.கே அம்மன்
  • பானு நகர்
  • ஒரகடம்
  • முருகம்பேடு
  • பசும்பொன் நகர்
  • கல்லிக்குப்பம்
  • சந்திரசேகரபுரம்
  • வெங்கடாபுரம்
  • கருக்கு

திருமுடிவாக்கம்

  • சிட்கோ 6-வது, 8-வது தெரு
  • மெயின் ரோடு மற்றும் லேன்
  • வேலாயுதம் நகர்
  • மீனாட்சி நகர்
  • சதீஷ் நகர்
  • கலைமகள் நகர்
  • சாய்பாபா லேன்
  • கற்பகம் நகர்
  • 400 அடி சாலை பார்க்கிங் யார்டு பகுதி
  • ஆசிரமம் அவென்யூ

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன்,  மாலை 5 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.