புதியன விரும்பு என்ற பெயரில் நடைபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை முகாம், தலைமைப் பண்பு மேம்பாடு, கலை & இலக்கியப் பயிற்சி முகாமில் பாடிய மாணவர்களின் கவிதை ராப், இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கென பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. கல்வி என்பது ஒருவருக்கு ஏட்டுக்கல்வியாக மட்டும் இருக்கக் கூடாது என்கிற நிலைப்பாட்டில் இருக்கும் பள்ளிக் கல்வித் துறை மாணவர்களுடைய ஆளுமைத் திறனை வளர்க்கும் வகையில் பல புதிய திட்டங்களை முன்னெடுத்து இருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக உதகமண்டலத்தில் சென்ற ஆண்டு 'புதியன விரும்பு' என்கிற பெயரில் ஒரு முகாம் நடைபெற்றது. இந்தக் கோடை முகாமில் அவர்களுடைய கலைகளையும் இலக்கிய வாசிப்பையும் வளர்த்துக் கொள்வதற்கான அமர்வுகள் நடந்தேறின.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் உதகமண்டலத்தில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கென புதியன விரும்பு- 2023 என்ற பெயரில் கோடை முகாம் நடைபெற்றது. அதில் 14 கலை வடிவங்களும் கதை, சிறுகதை, நாவல் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய வடிவங்களையும்
மாணவர்கள் கற்றுக் கொண்டனர். மேலும் பல்வேறு ஆளுமைகளும் இந்த முகாமில் கலந்துகொண்டு மாணவர்களோடு உரையாற்றினர்.
இந்த முகாமின் தொடக்க விழா கடந்த 23ஆம் தேதி அன்று உதகமண்டலத்தில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் நடைபெற உள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்கான அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா முன்னிலையில் நடக்கும் தொடக்க விழாவில் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில், மாணவர்கள் கலந்துகொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தினர். அதில், மாணவர்கள் பாடிய ராப் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பான வீடியோவை பள்ளிக் கல்வித்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.