163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேர இதுவரை 2,24,514 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 22-ம் தேதி ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது. இதற்கு மாணவர்கள் https://tngasa.org/, https://tngasa.in/ என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்து வருகின்றனர்.
இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விண்ணப்பக் கட்டண விவரம்
விண்ணப்பக் கட்டணம் - ரூ.48/, பதிவுக் கட்டணம் - ரூ.2. எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் - ரூ.2/- மட்டும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Credit Card/ Debit Card/ Net Banking மூலம்
இணையதள வாயிலாகச் செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai - 6” என்ற பெயரில் 27/06/2022 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.
இந்நிலையில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேர இதுவரை (ஜூன் 27) 2,24,514 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். இதில், 1,74,941 பேர் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்துள்ளனர். 1,51,206 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://tngasa.org/, https://tngasa.in/ஆகிய இணையதள முகவரிகள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேர இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய ஜூலை 7ஆம் தேதி கடைசி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்