மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணை வேந்தர் தேடுதல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாலகுருசாமியை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணை வேந்தராக இருக்கும் கிருஷ்ணனின் பதவிக்காலம் வரும் 2022 ஜனவரி 1ஆம் தேதி முடிவடைகிறது. பல்கலை விதிப்படி புதிய துணை வேந்தரை தேர்வு செய்யும் தேர்வுக் குழு அமைக்கும் பணி கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி இருக்க வேண்டும். இதுதொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு அமைக்க வேண்டும் என்று பல்கலை பேராசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியிருந்தது.




இந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணை வேந்தர் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாலகுருசாமியை ஆளுநரின் பரிந்துரையின் படி தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. பாலகுருசாமி நீட், புதிய கல்விக் கொள்கை, நவோதய பள்ளிகளுக்கு ஆதரவு தெரிவித்தவர் ஆவார். இதற்கெல்லாம், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஆட்சியில் இருக்கும்போது அவரை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும், சிண்டிகேட் பிரதிநிதியாக டாக்டர் எம்.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தமிழ்நாடு அரசு பரிந்துரைபடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்த பல்கழைக்கழகத்தின் பரிந்துரைபடி, செனட் பிரிதிநிதியாக டாக்டர் பி.மருதமுத்து நியமிக்கப்பட்டுள்ளார்.




பல்கலைக்கழகத்தின் விதிப்படி துணைவேந்தர் பதவிக்காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன் புதிய துணைவேந்தர் தேர்வுக் குழு அமைக்கும் பணியை தொடங்க வேண்டும். தேர்வுக் குழுவில் இடம் பெறும் சிண்டிகேட் மற்றும் செனட் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் பணியை தொடங்க வேண்டும். 4 மாதங்களுக்குள் நடவடிக்கை முடிந்து புதிய துணைவேந்தர் பதவிக்கான தகுதியுள்ள மூன்று பேர் பட்டியலை ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


 






 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண