மதுரையில் நாளை காமராஜர் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவிற்காக மதுரை வருகிறார் தமிழக ஆளுநர் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - பட்டமளிப்பு விழாவில் செல்போன் மற்றும் குழந்தைளுக்கு அனுமதி இல்லை - பல்கலைகழக நிர்வாகம் உத்தரவு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55வது ஆண்டு பட்டமளிப்பு விழா நாளை பல்கலைகழக வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். இதற்காக தற்போதில் இருந்தே பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் எதிரொலியாக ஆளுநர் வருகையை முன்னிட்டு காவல் துறையின் பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி பட்டமளிப்பு விழாவில் அழைப்பிதழ் உள்ளவர்களுக்கே அனுமதி எனவும், காலை 10.30 மணிக்குள் விழாவிற்கு வருகை தர வேண்டும், விழாவின் போது அணிவகுப்பினர் மன்றத்தினுள் நுழையும்போது அனைவரும் எழுந்து நின்று அணிவகுப்பினர் அமர்ந்த பின்னர் அமர வேண்டும், இதே போன்று பட்டமளிப்பு விழா முடிவில் நாட்டுப்பண் முடிந்து அணிவகுப்பினர் மன்றத்தில் இருந்து செல்லும் வரை எழுந்து நிற்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பட்டமளிப்பு விழாவின் போது குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது என்றும், பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் அலைபேசிக்கு அனுமதி கிடையாது எனவும் அழைப்பிதழில் பல்கலைகழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அழைப்பிதழ் குறிப்பில்
விருந்தினர்கள் பார்வைக்கு
* அழைப்பிதழை நுழைவாயிலின் காட்டவும்.
* காலை 10.30 மணிக்தன் இருக்கையில் சுமரவும்,
* அணிவகுப்பினர் மன்றத்தினுள் நுழையும்போது அனைவரும் எழுந்து நின்று அணிவகுப்பினர் அமர்ந்த பின்னர் அமரவும்.
* பட்டமளிப்புவிழா முடிவில் நாட்டுப்பண் முடிந்து அணிவகுப்பினார். மன்றத்தில் இருந்து செல்லும் வரை எழுந்து நிற்கவும்
* குந்தைகளுக்கு அனுமதி கிடையாது.
* அலைபேசிக்கு அனுமதி கிடையாது.
For the kind attention of the invitees
Kindly bring this invitation with you
Guests are roquested to occupy their seats by 10.30 axm
▸ All are requested to stand up when the procession enters the hall All can resume their seats only after the members of the procession take their seats.
At the close of the Convocation, all are requested to remain standing when the National Anthem is recited and till the procession leaves the hall
Qutsiders / Children will not be admitied
➤ Mobile phone will not be admitted.