பாஜக நிர்வாகி..


சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் பா.ஜ.க. நிர்வாகி பாலச்சந்தர் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை விவகாரம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். பா.ஜ.க. நிர்வாகியை கொலை செய்தது பிரதீப், சஞ்சய் மற்றும் கலைவாணன் என்பது தெரியவந்துள்ளது. ரவுடிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாகியுள்ள மற்றொரு நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


 பதவி பிரச்னை..


இந்த நிலையில், பா.ஜ.க. நிர்வாகி பாலச்சந்தர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி பாலச்சந்தருக்கு ஏராளமான எதிர்ப்புகள் கட்சியிலே இருந்துள்ளது. கடந்த மாதம் பா.ஜ.க.வில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டபோது பாலச்சந்தருக்கு மத்திய சென்னை பா.ஜ.க. எஸ்.சி. பிரிவு தலைவர் பதவி வழங்கப்பட்டது. அப்போது முதல் அவருக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.




எத்தனை நாள் பாதுகாப்பு...?


பாலச்சந்திரனுக்கு பாதுகாவலராக கடந்தாண்டு வீரபத்திரன் என்ற காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போதே, அவரிடம் பிரதீப், சஞ்சய் மற்றும் கலைவாணன் ஆகிய மூன்று பேரும்  பாதுகாவலர் வீரபத்திரனை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் வெளியில் வந்தனர்.


வெளியில் வந்த அவர்கள் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாலகிருஷ்ணனிடம், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, “ எத்தனை நாள் பாதுகாப்பு கொடுப்பீர்கள் என்று பார்ப்போம். என்றாவது ஒருநாள் அவரை தீர்த்து கட்டிவிடுவோம்.” என்று கூறியுள்ளனர். இந்த சூழலில்தான் பாலச்சந்தர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.




முன்விரோதம்..


அதேசமயத்தில், பாலச்சந்திருக்கு மத்திய சென்னை மாவட்ட பா.ஜ.க. எஸ்.சி., பிரிவு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்ட பிறகு, அவருடைய நண்பர்களான சுதீப் உள்ளிட்ட சிலர் பாலச்சந்தரிடம் தங்களுக்கும் பதவி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு பொறுப்புகள் வழங்க பாலச்சந்தர் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால், பாலச்சந்தருக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.


இதுமட்டுமின்றி, பாலச்சந்தரம் மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் தீவிர ஆதரவாளர். எல்.முருகனின் பெயரை தனது கையிலே பச்சை குத்தி வைத்திருந்தார். இதுபோன்ற சூழலில், பாலச்சந்தர் கொல்லப்பட்டிருப்பதால் அவர் எதற்காக கொல்லப்பட்டார்? என்றும் துணிக்கடை விவகார பண விவகாரத்தில் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டரா? அல்லது மேற்கண்ட காரணத்தால் கொல்லப்பட்டாரா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண