மாநிலம் முழுவதும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களுக்கும் தேர்வு எழுதாதவர்களுக்கும் நடத்தப்பட்ட துணைத் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதைப் பார்ப்பது எப்படி என்று காணலாம்.
மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு கடந்த ஜூன் , ஜூலை மாதங்களில் நடைபெற்றது. கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி தோல்வியடைந்த / வருகை புரியாத தேர்வர்களும், விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களும், இதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தனர்.
பள்ளி மாணவர்கள் மே 11 முதல் 17ஆம் தேதி வரை பள்ளிக்கு நேரில் சென்று விண்ணப்பித்தனர். அதேபோல தனித் தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பித்தனர். இதில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் மே 18 முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர்.
துணைத் தேர்வு ஜூன் 19 முதல் ஜூன் 26ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில், துணைத் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதைப் பார்ப்பது எப்படி என்று காணலாம்.
* தேர்வர்கள் இணையதளத்தில் https://dge.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* அதில் Results பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும்.
* அதில் இருந்து தங்களது தேர்வெண் (Roll No.) மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளைக் காணலாம். அதேபோல மதிப்பெண் பட்டியலையும் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அதேபோல https://apply1.tndge.org/senior-secondary-private-provisional-marksheet-02092021 என்ற இணைப்பை க்ளிக் செய்தும் தேர்வு முடிவுகளைக் காணலாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:
ஜூன் / ஜூலை 2023, மேல்நிலை துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு 27.07.2023 (வியாழக்கிழமை) மற்றும் 28.07.2023 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில் (தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு) முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று தேர்வர்கள் பதிவு செய்துகொள்ளலாம்.
(Scan Copy of of the Answer Script) விடைத்தாள் பெறுவதற்கான கட்டணம்:
ஒவ்வொரு பாடத்திற்கும் - ரூ.275/-
மறுகூட்டல் -1 (Re-totalling-I) கட்டணம் :
உயிரியல் பாடத்திற்கு மட்டும் - ரூ.305,
ஏனைய பாடங்
கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205,
விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் தேர்வர்கள் மட்டுமே பின்னர் மறுகூட்டல்-11 /, மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலும். மறுகூட்டல்-1 கோரி விண்ணப்பிக்கும் தேர்வர்கள் பின்னர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலாது என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: www.dge.tn.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.