தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 93.46 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது


தஞ்சை மாவட்டத்திலும் பிளஸ்-2 பொதுத் தேர்வினை 227 பள்ளிகளை சேர்ந்த 12,102 மாணவர்களும், 14 ஆயிரத்து 103 மாணவிகளும் என மொத்தம் 26 ஆயிரத்து 205 மாணவ, மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனர்.


இதே போல் தனித்தேர்வர்கள் 212 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். தஞ்சை மாவட்டத்தில் இந்த தேர்வு 110 மையங்களில் நடைபெற்றது.  தஞ்சை மாவட்டத்தில் மாணவர்கள் : 11819, மாணவிகள் : 13915 என மொத்தம்: 25734 தேர்வு எழுதினர்.


இதில் மாணவர்கள்: 10710, மாணவிகள்: 13342 தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவ, மாணவிகளின் மொத்த தேர்ச்சி : 24,052 ஆகும்


இதில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 90.62 சதவீதம், மாணவிகள் தேர்ச்சி விகிதம்: 95.88 சதவீதமாகும். மாணவ/ மாணவிகளின் மொத்த தேர்ச்சி விகிதம் : 93.46 சதவீதம்.


கடந்த ஆண்டு பிளஸ் -2 தேர்ச்சி சதவீதம் 95.18 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு அதை விட 1.72 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் 104 அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 4108 மாணவர்களில் 3468 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 84.42 ஆகும். இதேபோல் மாணவிகளில் 6000 பேர் தேர்வு எழுதியதில் 5 ஆயிரத்து 626 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 93.77 ஆகும். மாணவ மாணவிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 108 பேர் தேர்வு எழுதி இருந்தனர். இதில் மொத்தம்  9094 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.