தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட பிளஸ் டூ தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 92.28 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் 32வது இடம் பிடித்துள்ளது. கடந்தாண்டை காட்டிலும் 1.46% தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாநில கல்வி பாடத்திட்டத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடந்தது. சுமார் 7,80,550 பேர் தேர்வு எழுதினர். இதில் தனித்தேர்வர்கள் 8,190 பேரும் அடங்குவர். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 மையங்களில் நடைபெற்றது. இதில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திட்டமிட்டபடி மே 6ஆம் தேதியான இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம்போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 96.70 சதவிகிதம் ஆகவும், அரசு பள்ளிகளில் 91.32 சதவிகிதம், அரசு உதவி பெறும் பகுதிகளில் 95.49 சதவிகிதம் ஆகவும் உள்ளது. கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 0.58 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு காண முடிவு வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கீழ்க்கண்ட இணைய வழி மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
www.dge1.tn.nic.in ,
www.dge2.tn.nic.in ,
www.dge.tn.gov.in ,
www.tnresults.nic.in
ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் 92.37 சதவிகிதமும் மாணவிகள் 96.44 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காஞ்சிபுரம் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வில் 5750 மாணவர்களும் , 6791 மாணவிகள் என 12,541 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அரசு வெளியிட்ட தேர்வு முடிவுகளின்படி காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் தமிழகத்தில் 32 வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 1.46 % அதிகரித்துள்ளது.
தொடர்ந்து சரிவு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5680 மாணவர்களும், 6733 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 12,413 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். இதில் மாணவர்கள் 5060 நபர்களும், மாணவிகள் 6395 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்ச்சி சதவீதம் 92.28 உள்ளது. 2021 இரண்டாம் ஆண்டு காஞ்சிபுரம் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 27-வது இடத்தை பிடித்திருந்தது. கடந்த ஆண்டு சரிந்து 31 வது இடத்தை பிடித்திருந்தது. ஆனால் இம்முறை மீண்டும் சரிந்து 35 வது இடத்தை பிடித்துள்ளது.