செங்கல்பட்டு அரசு பள்ளி தேர்வு முடிவுகள் என்ன ?
செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரை அரசு நகராட்சி மற்றும் நலத்துறை பள்ளிகளை சேர்ந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 9886, இதில் 8891 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 4018, தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 3432 ,மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 85.42. இதுவே தேர்வு எழுதிய மாணவிகளின் எண்ணிக்கை 5868, தேர்ச்சி பெற்ற மாணவிகளின் எண்ணிக்கை 5459, தேர்ச்சி 93.03 சதவீதமாக உள்ளது. மொத்தம் 89.94% தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தேர்ச்சியை பொருத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3.34 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.
அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை மூன்றாக உள்ளது
அரசு மேல்நிலைப்பள்ளி அஞ்சூர்
அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி தையூர்
அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி இரும்பேடு ஆகிய பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன
அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் 3821. தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 3649. தேர்ச்சி சதவீதம் 95.49 ஆக உள்ளது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 97.92 ஆகவும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 91.12 ஆகவும் உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் இரண்டு பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன.
குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீ அய்யாசாமி ஐயர் மேல்நிலைப்பள்ளி மற்றும் செய்யூர் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி.
மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள்
மெட்ரிக் மற்றும் சுயநிலைப் பள்ளிகளில் தேர்வு எழுதிய மாணவர்களில் 98.45 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எண்ணிக்கை 72 ஆக உள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட முடிவுகள்
தமிழ்நாட்டில் உள்ள மாநில கல்வி பாடத்திட்டத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடந்தது. சுமார் 7,80,550 பேர் தேர்வு எழுதினர். இதில் தனித்தேர்வர்கள் 8,190 பேரும் அடங்குவர். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 மையங்களில் நடைபெற்றது. இதில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் திட்டமிட்டபடி மே 6ஆம் தேதியான இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்ட தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை 11,455 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதேபோன்று 13 ஆயிரத்து 787 மாணவிகள் தேர்வு எழுதினர். மொத்தமாக 25 ஆயிரத்து 742 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 10 ஆயிரத்து 632 மாணவர்களும், 13 ஆயிரத்து 275 மாணவிகளும் மொத்தம் 23 ஆயிரத்து 907 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்வு சதவீதம் 92.82 ஆக உள்ளது. மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.29 ஆக உள்ளது. மொத்தம் செங்கல்பட்டு மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 94.71 ஆக உள்ளது.
சாதித்த செங்கல்பட்டு
கடந்த ஆண்டை விட செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் 2.19 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டம் கடந்த ஆண்டு விட மூன்று இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை தமிழ்நாடு அளவில் பிடித்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை பின்னுக்கு தள்ளி செங்கல்பட்டு மாவட்டம் முன்னேறி உள்ளது.