தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் அர்ப்பணிப்பு மிக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு உருவாக்கிய பொதுத் தேர்வுக்கான 10, 12ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வங்கியை ABP Nadu சார்பில் தினந்தோறும் வெளியிட்டு வருகிறோம்.


அந்த வகையில் இன்று வேளாண் அறிவியல் பாடத்துக்கான மாதிரி வினாத்தாளை இந்தக் கட்டுரையில் காணலாம்.


 


12 ஆம் வகுப்பு                   மாதிரி வினாத்தாள் 2023                                   நேரம் : 3.00 மணி
                                       வேளாண் அறிவியல்                     மதிப்பெண்கள் : 90
                                                                 பகுதி -- I


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:                                                     15 * 1 = 15


1. லக்ஸ் மீட்டர் _________ அளக்கப் பயன்படுகிறது.
அ) ஒளியின் நிறம்       ஆ) ஒளியின் தரம்         இ) ஒளிச்சேர்க்கை       ஈ) ஒளி அடர்த்தி
2. மற்ற பயறு வகைப் பயிர்களைத் காட்டிலும் அதிகளவு பாஸ்பாரிக் அமிலம் கொண்ட பயறு வகைப் பயிர் __________.
3. பயிர் மேம்பாடு ஆராய்ச்சியில் சடுதி மாற்றத்திற்கு பயன்படும் மூலிகைப் பயிர் __.
4. உலக அளவில் வணிக மலர் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடு ______.
5. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ள ________ சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது.
அ) தார் பூசிய யூரியா                 ஆ) வேப்பம் பிண்ணாக்கு கலந்த யூரியா
இ) நுண் - கூழ்ம பூச்சு                  ஈ) இவை அனைத்தும்
6. ________ ஒரு இரைவிழுங்கி ஆகும்.
அ) அசுவின்            ஆ) பொறிவண்டு              இ) புகையான்              ஈ) தத்துப்பூச்சி
7. செயற்கை முறையில் தேனீ வளர்ப்பு ________ என அழைக்கப்படுகிறது.
அ) செரிகல்ச்சர்        ஆ) அக்ரிகல்ச்சர்         இ) ஏபிகல்ச்சர்         ஈ) ஆர்போரிகல்ச்சர்
8. விதை உற்பத்திக்கு ________ மூலமாகும்.
அ) ஆதார விதை                                        ஆ) கருவிதை          
இ) சான்றளிக்கப்பட்ட விதை                 ஈ) வல்லுநர் விதை
9. மண்ணில்லா வேளாண்மை என்பது _______ ன் ஒரு பிரிவாகும்.
10. இயற்கை முறையில் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழ் _________.
11. இராணித் தேனீயின் ஆயுட்காலம் ________ ஆகும்.
12. நவீன நாற்றங்கால் உற்பத்தியில் விதைகளை நடவு செய்ய ________ பயன்படுத்தப்படுகின்றன.
13. ' ஈகோமார்க்'  எனும் குறியீட்டை ________ வழங்குகிறது.
14. கோழிகளில் ஏற்படும் நோய் ________.
அ) ராணிக்கெட்         ஆ) பால்காய்ச்சல்            இ) அடைப்பான்         ஈ) அஃப்ளாநச்சு
15. துல்லிய பண்ணையம் தில் தேவைப்படுபவை ________.
அ) GIS மற்றும் GPS         ஆ) தரவுகள்         இ) தரவுத்தளங்கள்          ஈ) அனைத்தும்


                                                              பகுதி -- II                  
II. எதையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும்:                                      10 * 3 = 30
   வினா எண் 22- ற்கு கட்டாயமாக விடையளிக்கவும்.



16. SWOT என்பதன் விளக்கம் என்ன ?
17. உடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு யாது ?
18. சோற்றுக்கற்றாழையில் உள்ள வேதிப்பொருள் யாது ? அதன் பயன்கள் யாவை ?
19. தழைச்சத்து விரயமாகும் வழிகள் யாவை ?
20. பொருளாதார சேதநிலை என்றால் என்ன ?
21. ஒருங்கிணைந்த பண்ணையத்தின் அடிப்படைத் தத்துவம் யாது ?
22. திசு வளர்ப்பு -- குறிப்பு வரைக.
23. செங்குத்துக் தோட்டத்தின் நன்மைகள் யாவை ?
24. மண்புழுக்கள் வாழும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு எத்தனை வகையாகப் பிரிக்கலாம் ?
25. நில எழிலூட்டுதல் என்றால் என்ன ?
26. ' FSSAI ' பற்றி சிறு குறிப்பு வரைக.
27. மீன்களுக்கு ஏற்படும் பொதுவான நோய் அறிகுறிகளில் மூன்றினை எழுதுக.
28. வேளாண் ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் தேவைப்படும் தரவுத்தளங்கள் யாவை ?


                                   
                                                                        பகுதி -- III
III.  எதையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்கவும்:                                 5 * 5 = 25
    வினா எண் 31- க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.



29.தென்னை பயிரிடும்போது வறட்சி ஏற்பட்டால் எவ்வாறு சமாளிப்பது ?
30. தக்காளியில் நவீன நாற்றங்கால் தயார் செய்யும் முறையை எழுதுக.
31. எஞ்சிய நச்சினை நீக்கும் முறைகளை எழுதுக.
32. வல்லுநர் விதை, ஆதார விதை -- வேறுப்படுத்துக.
33. துல்லிய பண்ணையத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் யாவை ?
34. வேலையாள் தேனீக்கள் -- குறிப்பு வரைக.
35. கொய்மலர் உற்பத்தியை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் யாவை ?


                                                                     பகுதி -- IV 
IV.  விரிவான விடையாளி :                                                                                            2 * 10 = 20


36. உனது தோட்டத்தில் நிலக்கடலை எவ்வாறு சாகுபடி செய்வாய் என்பதனை விவரிக்கவும்.
                                      ( அல்லது )
     பயிர் பாதுகாப்பு இரசாயனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதனை    விவரிக்கவும்.
37. பட்டுப்புழுக்கள் எவ்வாறு வளர்க்கப்படுகின்றன என்பதை விவரிக்கவும்.
                                     ( அல்லது )
வேளாண் விளைபொருள் விற்பனை மற்றும் வணிகத்துறையின் செயல்பாடுகளை விவரிக்கவும். 


மாதிரி வினாத்தாள் உருவாக்கம்


ஆசிரியர் செ.கந்தன் (A3 குழு), 


விவசாய ஆசிரியர், 
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
பெருந்துறை, ஈரோடு மாவட்டம்


இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.