பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான மறு கூட்டல், மறு மதிப்பீடு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது.
தேர்வு நடந்தது எப்போது?
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி தேதி தமிழ் (மொழித்தாள்) பாடத்துடன் பொதுத் தேர்வு தொடங்கியது. மார்ச் 16ஆம் தேதி ஆங்கிலப் பாடம், மார்ச் 20ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், ஆகிய பாடங்களுக்குத் தேர்வு நடைபெற்றது.
மார்ச் 24ஆம் தேதி அன்று உயிரியல், தாவரவியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களுக்கும் மார்ச் 28ஆம் தேதி அன்று வேதியியல், கணக்குப் பதிவியல், மார்ச் 30ஆம் தேதி கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. கடைசியாக ஏப்ரல் 05ஆம் தேதி அன்று கணிதம், விலங்கியல், வணிகவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற்று முடிந்தது.
90.93% பேர் தேர்ச்சி
இந்தத் தேர்வை 3,61,454 மாணவர்களும், 4,15,389 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 7,76,844 பேர் 3,260 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். இதில் 7,06,413 மாணவ- மாணவிகள், அதாவது 90.93% பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்த நிலையில் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல், மறு மதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதற்கான முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. பொதுத் தேர்வுகள் எழுதி, மறு கூட்டல் (Re- total) மற்றும் மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக Notification பகுதியில் இன்று 21.06.2023 (புதன்கிழமை) பிற்பகல் வெளியிடப் பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத் தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை.
மறு கூட்டல் / மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மதிப்பெண் மாற்றம் கொண்ட தேர்வர்களின் பட்டியலைக் காண: https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1687335378.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.