10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் நாளை (ஜூன் 22) பிற்பகலில் வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மதிப்பெண்களில் மாற்றம் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த முடிவுகள் வெளியிடப்படும். 


மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்து, மறு கூட்டல் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். 


10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றன. தொடர்ந்து ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 3 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 60 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். 


முதலில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான அன்று, இந்த தேர்வு முடிவுகள் தேதி 19 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. 9,14, 320 மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வில்  8,35, 614 பேர் தேர்ச்சியடைந்தனர். சுமார் 78,706 பேர் தோல்வியடைந்தனர். 


இதனைத் தொடந்து  தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் மே 26 ஆம் தேதி முதல் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்களிலும் பெற்றுக் கொண்டனர். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மே 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பித்த நிலையில்,


மறுகூட்டல் முடிவுகள் நாளை (ஜூன் 22) பிற்பகலில் வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மதிப்பெண்களில் மாற்றம் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த முடிவுகள் வெளியிடப்படும். 


மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்து, மறு கூட்டல் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். 


இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று தெரிவித்துள்ளதாவது:


பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு எழுதி மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில்‌ மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தேர்வர்களது பதிவெண்கள்‌ பட்டியல்‌ 22.06.2023 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல்‌ வெளியிடப்படும்‌. இதைப் பார்க்க மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குள்‌ செல்லவும். அதில் தோன்றும் 'SSLC APRIL 2023 RETOTAL RESULTS’ என்ற வாசகத்தினை க்ளிக் செய்த பின்னர்‌, தோன்றும்‌ பக்கத்தில்‌ மறுகூட்டல்‌ முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்‌. 


மதிப்பெண்களில்‌ மாற்றம்‌ உள்ள தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்களை மதிப்பெண்‌ மாற்றங்களுடன்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.


அதேபோல மதிப்பெண்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து பட்டியலில்‌ இடம்‌பெறாத பதிவெண்களுக்கான விடைத் தாள்களில்,‌ மதிப்பெண்களில்‌ எவ்வித மாற்றமும்‌ இல்லை என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.