2025ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த இடத்தில் விருதுநகர் மாவட்டம் உள்ளது. 3ஆம் இடத்தில் தூத்துக்குடி மாவட்டமும், அடுத்தடுத்த இடங்களில் முறையே கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களும் பெற்றுள்ளன.

வழக்கமாக ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் முதலிடங்களைப் பெறும். எனினும் இந்த முறை கொங்கு மண்டலம் கோட்டை விட்டுள்ளது. தமிழ் மொழிப் பாடத்தில் 8 மாணவ- மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்கள்

சிவகங்கை 98.31 %
விருதுநகர் 97.45 %
தூத்துக்குடி 96.76 %
கன்னியாகுமரி 96.66 %
திருச்சி 96.61 %
கோயம்புத்தூர் 96.47
பெரம்பலூர் 96.46
அரியலூர் 96.38
தர்மபுரி 96.31
கரூர் 96.24
ஈரோடு 96
தஞ்சாவூர் 95.57
திருவாரூர் 95.27
தென்காசி 95.26
விழுப்புரம் 95.09
காஞ்சிபுரம் 94.85
திருப்பூர் 94.84
கிருஷ்ணகிரி 94.64
நாமக்கல் 94.52
கடலூர் 94.51
திருநெல்வேலி 94.16
மதுரை 93.93
மயிலாடுதுறை 93.9
ராமநாதபுரம் 93.75
புதுக்கோட்டை 93.53
திண்டுக்கல் 93.28
ஊட்டி 93.26
திருவண்ணாமலை 93.1
திருப்பத்தூர் 92.86
சேலம் 92.17
நாகப்பட்டினம் 91.94
தேனி 91.58
ராணிப்பேட்டை 91.3
சென்னை 90.73
செங்கல்பட்டு 89.82
திருவள்ளூர் 89.6
கள்ளக்குறிச்சி 86.91
வேலூர் 85.44
காரைக்கால் 93.6
புதுச்சேரி 97.37

அரசுப் பள்ளி மாணாக்கர்களில் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்

1. சிவகங்கை - 97.49%

2. விருதுநகர் - 95.57%

3. கன்னியாகுமரி - 95.47%

4. திருச்சி - 95.42%

5. தூத்துக்குடி - 95.40%

10ஆம் வகுப்புத் தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை - 8,71,239, இதில் மாணவியர்களின் எண்ணிக்கை  4,35,119 மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை : 4,36,120 ஆகும்.

93.80% பேர் தேர்ச்சி

இதில் 8,17,261 பேர் (93.80%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 4.17,183 (95.88%) பேரும் மாணவர்கள் 4,00,078 (91.74%) பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட 4.14 மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்விற்கு வருகை புரியாதவர்கள் எண்ணிக்கை 15,652 ஆக உள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்ச்சி சதவிகிதம் 91.55% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி 2.25% சதவிகிதம் கூடுதலாக உள்ளது.

கூடுதல் விவரங்கள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,485. இவற்றில் 

மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை : 7,555 

உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை : 4,930.

100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 4,917.

100% தேர்ச்சி பெற்ற எண்ணிக்கை 1.867 என்று அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. 

தேர்வு முடிவுகளை அறிவது எப்படி?

மாணவர்கள் dge.tn.gov.in, tnresults.nic.in, results.digilocker.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்களுக்குச் சென்று அறிந்து கொள்ளலாம். 

அதேபோல, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்றும் அறிந்துகொள்ளலலாம். மேலும் மாணவர்கள்‌ தங்களின் பள்ளிகளில்‌ சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில்‌ குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள்‌ குறுஞ்செய்தி ஆக அனுப்பப்பட்டு உள்ளன.