TN 10th Result 2025: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அறியும் வழிமுறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement


10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:


மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. அதனை தொடர்ந்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகின. இந்நிலையில் தான், இன்று மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி , 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 16 காலை 9 மணிக்கும், 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும் வெளியிடப்பட உள்ளன.


தேர்வு முடிவுகளை 4 வழிகளில் காணலாம். எப்படி?


இணைய வழி: மாணவர்கள் 10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஆன்லைனிலேயே காணலாம். குறிப்பாக, dge.tn.gov.in, tnresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்களுக்குச் சென்று அறிந்து கொள்ளலாம். எனினும் இதற்கு தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.


மத்திய அரசு இணையதளம்: மாநில அரசு இணையதளத்தில் காண முடியவில்லை எனில், results.digilocker.gov.in என்ற மத்திய அரசின் இணையதளம் மூலமாகவும் தேர்வர்கள்‌ தேர்வு முடிவுகளைப் பெறலாம்.


பள்ளிகளில் பார்க்கலாம்: மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்றும் அறிந்துகொள்ளலலாம்.


குறுஞ்செய்தி வழியாகவும் காண முடியும்: மாணவர்கள்‌ தங்களின் பள்ளிகளில்‌ சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில்‌ குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள்‌ அனுப்பப்பட உள்ளன.


தனித் தேர்வர்களுக்கு எப்படி?


தனித் தேர்வர்களுக்கு ஆன்‌லைனில்‌ விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கு, குறுஞ்செய்தி வழியாக‌ தேர்வு முடிவுகள்‌ அனுப்பப்படும்‌ என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பத்தாம்‌ வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்‌ தேர்வு முடிவுகள்‌ மே 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் 91.55% பேர் தேர்ச்சி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பொதுத்தேர்வு


10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ் மொழிப் பாடத்துடன் தொடங்கிய தேர்வு, சமூக அறிவியல் தேர்வுடன் முடிவு பெற்றது. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 22 தொடங்கி 28 ஆம் தேதி நிறைவு பெற்றன.