திருவாரூர் மாவட்டத்தில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் 91.26 சதவீதமும் 10 ஆம் வகுப்பில் 87.18 சதவீதமும் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் இயங்காமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த வருடம் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. மேலும் தமிழக அரசு கடந்த கல்வியாண்டில் கண்டிப்பாக பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்து இருந்தது. சென்ற கல்வி ஆண்டில் 100% தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தத் தேர்வு நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் கடந்த கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டது. 




அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் 15 ஆயித்து 556 மாணவ-மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதுதினர். 738 பேர் தேர்வு எழுதவரவில்லை. திருவாரூர்  மாவட்டத்தில் உள்ள 68 தேர்வு மையங்களில் 8 ஆயிரத்து 67 மாணவர்கள், 7 ஆயிரத்து 958 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 25 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இந்த தேர்வில் 7 ஆயிரத்து 595 மாணவர்கள், 7 ஆயிரத்து 742 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 337 பேர் தேர்வு எழுத்தினர். இதில் 738 மாணவர்கள் தேர்வு எழுதவரவில்லை. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை பிளஸ் டூ தேர்விற்கு  6 ஆயிரத்து 116 மாணவர்களும், 7 ஆயிரத்து 257 மாணவிகளும் என ஒட்டு மொத்தமாக 13 ஆயிரத்து 373 மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு 120 மையங்களில் மொத்தம் 12 ஆயிரத்து 835  மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.




திருவாரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 87.18 சதவீதம் ஆகும். இதில் 6 ஆயிரத்து 247 மாணவர்களும் 7 ஆயிரத்து 124 என ஒட்டுமொத்தமாக 13 ஆயிரத்து 377 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 82.25 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 92.02 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பிளஸ் டூ பொதுத்தேர்வினை திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 830 மாணவர்களும் 7 ஆயிரத்து 5 மாணவிகளும் என ஒட்டுமொத்தமாக 12 ஆயிரத்து 835 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.இதில் 5 ஆயிரத்து 119 மாணவர்களும்  6 ஆயிரத்து 594 மாணவிகளும் என ஒட்டுமொத்தமாக  11 ஆயிரத்து 713 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ மாணவிகளின் மொத்த சதவீதம் 91.26 சதவீதம் ஆகும்.பிளஸ் டூ பொதுத் தேர்வில் திருவாரூர் மாவட்டத்தில் மாணவர்கள் 87.80 சதவீதமும் மாணவிகள் 94.13 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வழக்கம்போல் மாணவர் விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண