12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள், இன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் வெளியிடப்பட்டது. மாணவர்கள் www.tnresults.nic.in மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். தொடர்ந்து மார்ச் 23-ம் தேதி முதல் மாணவர்களின் விடைத் தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே இருந்து திருத்துதல் முகாம்களுக்கு விடைத் தாள்கள் மார்ச் 28-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தம் பணி ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 13ஆம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் இன்று பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான வெளியிடப்பட்டது. அதன்படி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 




இதில், தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெளியான தேர்வு முடிவுகள் அடிப்படையில் திருப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் ஈரோடும், சிவகங்கை மாவட்டங்களும் உள்ளன. அரியலூர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.  


தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகளவில் மாணவிகளே பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


தேனி மாவட்டத்தில் 6060 மாணவர்களும், 6551 மாணவிகளும் மொத்தம் 12611 மாணவர்கள் +2 தேர்வு எழுதினார்கள். இதில் 5647 மாணவர்களும் 6289 மாணவிகளும் என மொத்தம் 11936 மாணவர்கள்  தேர்ச்சி  பெற்று உள்ளனர். மாவட்டத்தில் மாணவர்களின் மொத்த தேர்ச்சி சதவீதம் 94.65% உள்ளது.  சென்ற ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சதவீதம் மொத்தம் 90.26  இருந்த நிலையில் சென்ற ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் இந்தாண்டு உயர்ந்துள்ளது. இந்த வருடமும் தேர்வு முடிவில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகளவில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர்.




திண்டுக்கல் மாவட்டத்தில் 8566 மாணவர்களும், 10443 மாணவிகளும் மொத்தம் 19009 மாணவர்கள் +2 தேர்வு எழுதினார்கள். இதில் 8006 மாணவர்களும் 10128 மாணவிகளும் என மொத்தம் 18134 மாணவர்கள்  தேர்ச்சி பெற்று உள்ளனர். மாவட்டத்தில் மாணவர்களின் மொத்த தேர்ச்சி சதவீதம் 95.40% உள்ளது. சென்ற ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சதவீதம் மொத்தம் 91.77  இருந்த நிலையில் சென்ற ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் இந்தாண்டு உயர்ந்துள்ளது. இந்த வருடமும் தேர்வு முடிவில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகளவில் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.