12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் இதில் பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம் என்னவென்று பார்க்கலாம். 

12 ஆம் வகுப்பு தேர்வுகளை மொத்தம் 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய நிலையில் 7,19,196 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் மாணவிகள் 4,08,440 பேரில் 3,93,890 பேர் தேர்வு பெற்றுள்ளனர். 3,52,165 மாணவர்களில் 3,25,305 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.07% தேர்ச்சி பெற்றுள்ளனர். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் நாளை முதல் பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் வகையில் மே 9 ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

மாவட்ட  வாரியாக பார்க்கும்போது திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது. இரண்டாம் இடம் ஈரோடு மற்றும் சிவகங்கை மாவட்டத்துக்கு கிடைத்தது. 3வது இடத்தில் அரியலூரும், 4வது இடத்தில் கோயம்புத்தூர், 5வது இடத்தில் விருதுநகர், 6வது இடத்தில் திருநெல்வேலி, 7வது இடத்தில் பெரம்பலூர், 8வது இடத்தில் தூத்துக்குடி,9வது இடத்தில் நாமக்கல், 10வது இடத்தில் தென்காசி மாவட்டமும் இடம் பிடித்துள்ளது. 

இதேபோல் 5,603 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களில் 5,603 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல் 115 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல் 26,632 மாணவ, மாணவியர்கள் ஒரு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். மொத்தமாக தேர்ச்சி விகிதம் 94.56% சதவிகிதமாக உள்ள நிலையில் இது கடந்த ஆண்டை விட 0.53% அதிகமாகும் 

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

மொத்தம் 7,532 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 2,478 ஆக உள்ளது. குறிப்பாக 397 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. 

பள்ளிகள்  தேர்ச்சி விகிதம்
அரசு பள்ளிகள்  91.02%
அரசு உதவி பெறும் பள்ளிகள்  95.49%
தனியார் பள்ளிகள்  98.70%
இருபாலர் பள்ளிகள்  94.78%
பெண்கள் பள்ளிகள்  96.39%
ஆண்கள் பள்ளிகள்  88.98%

மேலும் படிக்க: TN 12th Result 2024 LIVE: வெளியானது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - 9ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்