தஞ்சாவூர்: சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் கட்டுப்பாட்டின் கீழ் தஞ்சையில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2023-2024-ம் கல்வியாண்டிற்கான 1-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:


சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் கட்டுப்பாட்டின் கீழ் தஞ்சையில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2023-2024-ம் கல்வியாண்டிற்கான 1-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.


இந்த பள்ளியில் சிறப்பாசிரியர்களால் பார்வையற்ற மற்றும் பார்வைத்திதிறன் குறையுடைய மாணவர்களுக்கு பிரத்தியேக முறையான பிரெய்ல் வழி கல்வி வாயிலாக கற்பிக்கப்படுகிறது. மேலும் இந்த பள்ளியில் மத்திய மற்றும் மாநில அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள், மாநில அரசால் வழங்கப்படும் கல்வி உபகரணங்கள், சீருடை, காலணி, பிரெய்ல் புத்தகங்கள் மற்றும் கணித உபகரணங்கள் இலவசமாக பெற்றுத்தரப்படுகிறது.


இந்த பள்ளி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத மாணவர் தேர்ச்சியினை தொடர்ந்து அளித்து வருகிறது. மாணவர்களுக்கு மாதந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பள்ளியின் விடுதியில் மாணவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு இடமும், ஆரோக்கியமான உணவு மற்றும் தூய்மையான குடிநீர் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.


இங்கு மாணவர் சேர்க்கைக்கு, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம், தஞ்சை, என்ற முகவரியில் அணுகலாம். மேலும் அலுவலக தொலைபேசி எண் 04362-272222 மற்றும் தலைமை ஆசிரியரின் செல்போன் எண்கள் 9629495808, 8903263066 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பார்வை திறன் குறையுடைய மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெற்று, வாழ்க்கையில் உயர வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தஞ்சையில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.


இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் முழுமையாக தேர்ச்சி பெற்று செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத மாணவர் தேர்ச்சியினை தொடர்ந்து அளித்து வருகிறது. அந்தளவிற்கு இப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் உயர்வுக்காக பாடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் கல்வித்திறனை உயர்த்தி அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உழைக்கின்றனர் என்று மாணவர்களின் பெற்றோர்களும் பாராட்டுவது குறிப்பிடத்தக்கது.