டெட் எனப்படும் ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வின் முதல் தாள் ஆகஸ்ட் 25 முதல் 31 வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வுக்கான கால அட்டவணை, ஹால் டிக்கெட் உள்ளிட்ட விவரங்கள் ஆகஸ்ட் 2-ம் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.


இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு 2011-ல் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும்.


முன்னதாக 2022ஆம் ஆண்டு தேர்வுக்கு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஜூலை 11 முதல் 16ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.




இந்நிலையில், ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வின் முதல் தாள் ஆகஸ்ட் 25 முதல் 31 வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வுக்கான கால அட்டவணை, ஹால் டிக்கெட் உள்ளிட்ட விவரங்கள் ஆகஸ்ட் 2-ம் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்துஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''தமிழ்நாடு ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு 2022ம்‌ ஆண்டிற்கான ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின்‌ அறிவிக்கை எண்‌ 01/2022, நாள்‌ 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது. இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள்‌ 14.03.2022 முதல்‌ பதிவேற்றம்‌ செய்யலாம்‌ என தெரிவிக்கப்பட்டது. 


மேலும்‌, விண்ணப்பதாரர்‌ விண்ணப்பத்தினைப் பதிவேற்றம்‌ செய்ய 26.04.2022 வரை கால அவகாசம்‌ வழங்கப்பட்டது. அதில் கணினி வழித்‌ தேர்வுக்கான தேதி பின்னர்‌ அறிவிக்கப்படும்‌ எனத் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது ஆகஸ்ட் மாதம்‌ 25 முதல்‌ 31 வரை உள்ள தேதிகளில்‌ தாள்‌- 1 ற்கு மட்டும்‌ முதற்கட்டமாகத் தேர்வுகள்‌ நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம்‌ தேர்வர்களுக்கு கெரிவிக்கப்படுகறது.


தேர்வு கால அட்டவணை மற்றும்‌ அனுமதிச் சீட்டு (Admit card) ‌ வழங்கும்‌ விவரம்‌ ஆகஸ்ட்‌ இரண்டாம்‌ வாரத்தில்‌ அறிவிக்கப்படும்''‌ என்று ஆசிரியர்‌ தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண