கரூர் மாவட்டம், குளித்தலை ரயில்வே நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடையில் இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் மாலை நீண்ட நேரமாக அமர்ந்து இருந்துள்ளார். அப்போது திருச்சியில் இருந்து சரக்கு ரயில்வே ஒன்று குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்தது.  அப்போது ரயில் வந்த தண்டவாளத்தில் நடுப்பகுதியில் அந்த இளைஞர் திடீரென வந்து நின்றுள்ளார். இதைபார்த்த சரக்கு ரயில் எஞ்ஜின் டிரைவர் ஹாரன் ஒலி எழுப்பியுள்ளார்.


 


 




இருப்பினும் அந்த இளைஞர் ரயில் தண்டவாளத்தை விட்டு நகர்ந்து செல்லாமல் சரக்கு ரயிலுக்கு முன் நேருக்கு நேர் நின்று கொண்டு இருந்துள்ளார். இதனால் ரயில் இளைஞர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை  அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த சிலர் நேரடியாக பார்த்துள்ளனர். உடனே, இதுகுறித்து கரூர் ரயில்வே போலீசாருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது.


 


 




அங்கு வந்த ரயில்வே  ஊழியர்கள் இளைஞரின் உடையில் இருந்த  கல்லூரி மாணவர் அடையாள அட்டையை எடுத்து பார்த்தனர். அப்போது அந்த இளைஞரின் பெயர் கோபிநாத் (வயது 20) என்றும், அதனுடைய சேர்ந்த அவர் அய்யர் மலையில் உள்ள டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி பி. காம். சி.ஏ. படித்து வந்தது தெரியவந்தது. 


 


 




இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த கரூர் ரயில்வே போலீசார் கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், கோபிநாத் எதற்காக ரயில் முன் நின்று தற்கொலை செய்து கொண்டார் என ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




 


மேலும், தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவன் கோபிநாத் யாரையாவது காதலித்து உள்ளாரா அல்லது குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனையா அல்லது கல்லூரி சம்பந்தமான ஏதேனும் பிரச்சனையா என பல்வேறு கோணத்தில் ரயில்வே போலீசார் மற்றும் குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கரூர் குளித்தலை அருகே சரக்கு ரயில் மீது கல்லூரி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லூரி மட்டுமில்லாது கரூர் மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண