தஞ்சை ஜெபமாலைபுரம் மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் சென்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டார்.
தஞ்சாவூர் ஜெபாமாலைபுரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. தஞ்சையில் உள்ள 51 வார்டுகளில் சேரும் குப்பைகள் இங்கு சேகரிக்கப்பட்டு வருகிறது. மறு சுழற்சிக்காக குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகள் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் இந்த குப்பைக் கிடங்கு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ எதிரே இருந்த 6 கூரை வீடுகளுக்கும் பரவியது. இதில் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரரான ஆரோக்கியசாமி (73) என்பவர் வசித்து வந்த வீடும் தீப்பிடித்து எரிந்தது. உடல்நிலை முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடந்த ஆரோக்கியசாமி இந்த தீவிபத்தில் சிக்கிக் கொண்டார். பலத்த தீக்காயமடைந்த அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையில் தஞ்சை மாவட்டத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று காலை வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் தீவிபத்து ஏற்பட்ட பகுதியையும் பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து 6 வீடுகளும் தீ விபத்தில் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்கள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது என்றார். அவருடன் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்எல்ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் இருந்தனர்.
இந்நிலையில் தீ விபத்தில் மரணம் அடைந்த ஆரோக்கியசாமி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டி தர வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரண வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஜெபமாலைபுரம் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கு குடியிருப்புகள் இல்லாத காலத்தில் ஏற்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இப்பகுதியில் ஏறத்தாழ 5 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகளும், மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியாகவும் ஜெபமாலைபுரம் பகுதி மாறியுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரித்து இந்த குப்பைக்கிடங்கில் கொட்டப்படும் கழிவுகளால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி அழுகி துர்நாற்றம் வீசுவதுடன், மிகப்பெரிய சுகாதார சீர்கேடும் உருவாகிறது. காற்று வீசும் காலம் மற்றும் கோடை காலத்தில் திடீர், திடீரென குப்பைகள் தீப்பற்றி எரிவது தொடர்கதையாக உள்ளது. இனியும் இதுபோன்று நடக்காமல் தடுக்க அரசு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்