தஞ்சாவூர்: தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை கல்லூரியில் நடந்த கலந்தாய்வில் மாணவிக்கு சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது.
குந்தவை நாச்சியார் கல்லூரியில் பொது கலந்தாய்வு
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற முதல் பொது கலந்தாய்வில் பி.காம், பி.பி.ஏ., பாடத்திற்கான கலந்தாய்வில் 121 மாணவிகள் சேர்க்கை பெற்றனர். அதேபோல் அனைத்து அறிவியல் பாடங்களுக்கான கலந்தாய்வில் 24 பேர் சேர்க்கை பெற்றனர்.
பி.ஏ, தமிழ், ஆங்கிலம் பாடத்திற்கு 122 மாணவிகள் சேர்க்கை
பி.ஏ. தமிழ் மற்றும் பி.ஏ. ஆங்கிலப் பாடத்திற்கான கலந்தாய்வில் 122 மாணவிகள் சேர்க்கை பெற்றனர். நேற்று 300 முதல் 400 கட் ஆப் மதிப்பெண் பெற்ற பி.ஏ வரலாறு மற்றும் பி.ஏ. பொருளியல் பாடத்திற்கு விண்ணப்பித்த மாணவிகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அனைத்து அறிவியல் பாடங்களுக்கும் விண்ணப்பித்த மாணவிகளில் 250 முதல் 339 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும் வரும் 15ம் தேதி அனைத்துக் கலைப்பிரிவு மாணவிகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலந்தாய்வுக்கான அழைப்பு
கலந்தாய்வுக்கான அழைப்பு குறுஞ்செய்தி மின் அஞ்சல் வழியாக மாணவிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற சிறப்பு இட ஒதுக்கீட்டின் கான கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு வீரர்கள் உட்பட 44 மாணவிகள் சேர்க்கை நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் கட்ட பொதுக் கலந்தாய்வு 24ம் தேதி முதல் நடைபெறும். கல்லூரி கோடை விடுமுறைக்குப் பின் 19ம் தேதி கல்லூரி திறக்கப்படுகிறது. முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்ற மாணவிகளுக்கு ஜூலை 3 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும். இத்தகவலை கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் தெரிவித்துள்ளார்.