முதுகலைப் படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான டான்செட் தேர்வுக்கு 36,710 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், மே 2-ம் தேதி ஹால் டிக்கெட் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மே 14ஆம் தேதி நடைபெற உள்ளது. முதுகலை தொழில்நுட்பப் படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மே 15 அன்று நடைபெறுகிறது. இத்தேர்வுகளை எழுத விண்ணப்பப் பதிவு அண்மையில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், டான்செட் தேர்வுக்கு மொத்தம் 36,710 பேர் விண்ணப்பித்தனர்.
இதில் எம்பிஏ படிப்பில் சேர 21,557 பேரும், எம்சிஏ படிப்பில் சேர 8,391 பேரும் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல முதுகலை தொழில்நுட்பப் படிப்புகளான எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேர 6,762 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை மறுநாள் (மே 2ஆம் தேதி) வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதள முகவரியில் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
தேர்வர்கள் மே 2 முதல் தேர்வுக்கு முந்தைய தினம் (மே 13-ம் தேதி) வரை ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
யாரெல்லாம் டான்செட் தேர்வுகளை எழுதத் தகுதியானவர்கள் என்று தெரிந்துகொள்ள https://tancet.annauniv.edu/tancet/TANCET%202022%20-Final%20-21022022.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து படிக்கவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்