மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் எப்போதுமே பரபரப்பாக இருக்கும் சாந்தினி சௌக் பகுதியில் உள்ள பழைய பாலத்தை ஞாயிறு அதிகாலை வேளையில் அன்று வெடியின் மூலம் தகர்க்கப்பட்டது






திட்டமிட்டபடி பாலம் இடிக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ளும் சாந்தனி சௌக் சந்திப்பில் போக்குவரத்து நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் இந்த பாலம் இடிக்கப்பட உள்ளது.


திட்டத்தின் படி, அந்த இடத்தில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட உள்ளது. இப்பணியில், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) மற்றும் உள்ளூர் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தேசிய நெடுஞ்சாலை அலுவலர்களுடன் எடிஃபைஸ் பொறியியல் குழு பாலத்தை இடிக்கும் பணியை மேற்கொள்ளும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். இதே நிறுவனம்தான் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் நொய்டாவின் சூப்பர்டெக் இரட்டை கோபுரத்தை இடித்தது.


சனிக்கிழமை காலை முதல் மாவட்ட அலுவலர்களுடன் காவல்துறையினரும் சம்பவ இடத்தில் இருந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பாலத்தை இடிக்கும் பணி நடைபெற்றதால், சனிக்கிழமை இரவு 11 மணிக்குப் பிறகு அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. இரவு 11 மணி முதல் காலை 8 மணி வரை அப்பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.


இதுகுறித்து போக்குவரத்து துணை காவல் ஆணையர் ராகுல் ஸ்ரீராம் பேசுகையில், "இந்த காலப்பகுதியில் இலகுரக வாகனங்கள் மாற்று வீதிகளை பயன்படுத்தி பயணிக்க முடியும் அதேவேளை கனரக வாகனங்கள் நிறுத்தப்படும். சதாராவில் இருந்து மும்பை நோக்கி நகரும் வாகனங்கள் நகரத்தில் பயணிக்க பல வழிகள் உள்ளன. 


பழைய கட்ராஜ் சுரங்கப்பாதை, நவலே பாலம், வார்ஜே ஆகியவற்றின் மூலம் சோமத்னே வழியாக பயணிகள் மும்பைக்கு செல்லலாம். மும்பையிலிருந்து வரும் பயணிகள், சதாரா நோக்கி பயணத்தைத் தொடங்குவதற்கு முன், நகரத்திற்குள் நுழைய சோமடனே பாடா, பேனர் வழித்தடத்தின் வழியே வெளியேறலாம்.


வெள்ளிக்கிழமை அன்று, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சாந்தனி சவுக்கில் நடந்து வரும் பாலப் பணிகளை வான்வழியாக ஆய்வு செய்தார். போக்குவரத்து சிக்கல்களைத் தீர்ப்பது குறித்து உள்ளூர் அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.


இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, போக்குவரத்து நிலைமையை ஆய்வு செய்வதற்காக அப்பகுதிக்கு சென்றார்.


இதையும் படிங்க: PS Box Office Collection: பொன்னியின் செல்வனின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஓப்பனிங் கலெக்‌ஷன்ஸ்..!