நவராத்திரி விழாவை முன்னிட்டு, கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் நவராத்திரி ஒட்டி பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு ,வித விதமான அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன .அந்த வகையில் காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள நாகதுர்க்கை அம்மன் அருள் பீடத்தில் நவராத்திரி விழாவானது, ஆண்டு வரும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இவ்வாண்டிற்கான நவராத்திரி விழாவானது கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கி வரும் 5-ஆம் தேதி விஷ்வரூப தரிசனமும் சர்வ அலங்காரத்துடன் அசூரசம்ஹாராம் விழாவுடன் இவ்விழா நிறைவு பெறுகிறது.



இந்த நவத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் நாகதுர்கை அம்மன் வெவ்வேறு அலங்காரங்களில் காட்சிளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில் அவ்விழாவின் ஏழாம் நாளான இன்று நாக துர்க்கையம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகாலட்சுமிக்கு அலங்காரமனாது சேவிக்கப்பட்டு 10,20,50,100,200,500. புதிய ரூபாய் நோட்டுக்களினால் 1இலட்சத்து ஐம்பத்தி ஏழாயிரம்(1,57,000) ரூபாயினால் அலங்காரமானது சேவிக்கப்பட்டு நகை ஆபரணங்கள் அளிக்கப்பட் டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.



 

இந்த 1இலட்சத்து ஐம்பத்தி ஏழாயிரம் (1,57,000) ரூபாய் நோட்டுக்களினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இந்த நவராத்திரி விழாவையொட்டி சாமி தரிசனம் செய்திட வருகைதந்த பக்தர்களுக்கும் அன்ன பிரசாதங்களும் வழங்கப்பட்டது. 



 

 

காஞ்சிபுரம் பத்ரகாளி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

 

காஞ்சிபுரம் பத்ரகாளி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்று வரும் நவராத்திரி உற்சவத்தில் , அனுதினமும் அம்பாளுக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அந்த வகையில் அன்னபூரணி அலங்காரத்தில் காட்சியளித்த அம்பாளை ஏராளமான பக்தர்கள் வணங்கி வழிபாடு செய்தனர். இதில் பல்வேறு வகையான உணவுப் பொருட்கள். பிஸ்கட்.பழ வகைகள் உள்ளிட்டவர்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்யப்பட்டது.



 

 மேலும் ஆலயத்தில் சிறப்பு கொழு அமைக்கப்பட்டு பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டு வணங்கி வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர் தெருவாசிகள் மற்றும் பக்தர்களுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.