பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தேர்வு முடிவினை, 23.08.2022 (செவ்வாய்க் கிழமை) பிற்பகல் 03.00 மணி முதல் இணையதளத்தில் இருந்து தங்களது தேர்வெண் (Roll No) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) பதிவு செய்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
இணையதளத்தில் பத்தாம் வகுப்பு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் :
1. தனித்தேர்வர்கள் வருகிற 23.08.2022 (செவ்வாய்க் கிழமை) பிற்பகல் 03.00 மணி தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். dge.tn.gov.in
2. மேற்படி இணையதள முகவரிக்குள் லாகின் செய்தவுடன், “NOTIFICATION < SSLC SUPPLEMENTARY EXAM, AUG 2022 < PROVISIONAL MARK SHEET DOWNLOAD” எனத் தோன்றும் வாசகத்தினை க்ளிக் செய்தால், தோன்றும் பக்கத்தில் தேர்வர்கள் தங்களது தேர்வெண் (Roll No) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) ஆகிய விவரங்களை பதிவு செய்து, தமது தற்காலிக மதிப்பெண்சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:
ஆகஸ்ட் 2022 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு 25.08.2022 (வியாழக்கிழமை) மற்றும் 26.08.2022 ( வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மறுகூட்டல் (ரீ- டோட்டல்) கட்டணம்:
பாடம் 205/ - (ஒவ்வொன்றிற்கும்)
அரசுத் தேர்வுத் துறையால் பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் மறுகூட்டல் முடிவுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.
12-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று ( ஆகஸ்ட் 22ஆம் தேதி) வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க: Plus 2 exam results: பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் ஆக.22-ல் வெளியீடு: பதிவிறக்கம் செய்வது எப்படி? - https://tamil.abplive.com/education/tn-plus-2-supplementary-exam-results-on-august-22-know-how-to-download-68636/amp