Child Marriage: குழந்தைத்‌ திருமணம்‌ இல்லா தமிழ்நாடு; அனைத்துப் பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க உத்தரவு

தமிழ்நாட்டைக் குழந்தைத்‌ திருமணம்‌ இல்லாத மாநிலமாக மாற்ற 38 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Continues below advertisement

தமிழ்நாட்டைக் குழந்தைத்‌ திருமணம்‌ இல்லாத மாநிலமாக மாற்ற 38 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Continues below advertisement

நாடு அறிவியல், மருத்துவம், தொழிலுநுட்பம் என எத்தனையோ துறைகளில் முன்னேறி வந்தாலும், இன்னொரு பக்கம் குழந்தைத் திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்குப் பல்வேறு காரணிகள் உள்ளன. 

குழந்தை திருமணத்துக்கான காரணங்கள்

* வறுமை, குறைவான வருமானம். 
* பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என உணர்வது
* விழிப்புணர்வு இல்லாமை

எப்படி தடுக்கலாம்?

* பெண் குழந்தைகள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
* பெண் குழந்தைகளுக்காக புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு, கல்வி வேலைவாய்ப்பில் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
* கிராமம், நகரம் என குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்தல்.
* மாவட்ட அளவில் குழந்தை திருமணத்தை தடுக்க அதிகாரிகளை நிர்வகித்தல்.

 

511 பேருக்கு திருமணம்

இந்த நிலையில் கொரோனா காலத்தில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் குழந்தைகளின் திருமணங்கள் கணிசமாக அதிகரித்தன. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவியர் 37 பேருக்கும், 10-ம் வகுப்பு மாணவியர் 45 பேருக்கும், 11-ம் வகுப்பு மாணவியர் 417 பேருக்கும், 12-ம் வகுப்பு மாணவியர் 2 பேருக்கும் என்று 511 பேருக்கு திருமணம் நடைபெற்றது. 

மேலும் பதிமூன்று வயதைக் கடந்த எட்டாம் வகுப்பு மாணவிகள் 10 பேருக்கும் குழந்தை திருமணங்கள் நடத்தப்பட்டிருந்தது பள்ளிக் கல்வித்துறையின் ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்களின் படிப்பு பாதிக்காமல் இருக்க மாணவிகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.

அனைத்து வகைப் பள்ளிகளிலும் உறுதிமொழி

இந்த நிலையில், குழந்தைத்திருமணங்களைத் தடுக்க, உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டு, புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளிகளில் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டைக் குழந்தைத்‌ திருமணம்‌ இல்லாத மாநிலமாக மாற்ற 38 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதுகுறித்து அனைத்து மாவட்டக் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி உள்ளதாவது:

’’குழந்தைத்‌ திருமணம்‌ இல்லா தமிழ்நாடு
16 அக்டோபர்‌ 2023
உறுதிமொழி

----- ஆகிய நான், எனது பகுதியிலோ அல்லது சமூகத்திலோ “குழந்தைத் திருமணம்‌” நடைபெறுவதாக தெரியவந்தால்‌ எதிராக அனைத்து நடவடிக்கைகளையும்‌ எடுப்பேன்‌ எனவும்‌ 

எனது சுற்றுப்புறத்திலும்‌ சமூகத்திலும்‌ எந்தவொரு குழந்தைக்கும்‌ திருமணம்‌ நடைபெறாமல்‌ இருப்பதை உறுதி செய்வேன்‌ எனவும் 

மேலும்‌, எங்கள் பகுதியில் குழந்தை தொழிலாளர்‌; குழந்தைகளுக்கு எதிரான பாலியல்‌ வன்கொடுமை போன்ற அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல்‌ கொடுப்பேன் எனவும்‌

குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும்‌; தடையற்ற கல்விக்காகவும்‌ தொடர்ந்து செயல்படுவேன்‌ எனவும்‌ உளமார உறுதி அளிக்கிறேன்‌’’.

இவ்வாறு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola