Hyundai Car Offers:  ஹுண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் கார் மாடலுக்கு முதல்முறையாக தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.


ஹுண்டாய் கார்களுக்கான தள்ளுபடி:


ஹூண்டாய் நிறுவனத்தின் i20, Grand i10 Nios மற்றும் Venue ஆகிய மாடல்களுக்கு, மே மாதத்திற்கு பணத் தள்ளுபடிகள், பரிமாற்ற போனஸ்கள் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், எக்ஸ்டெர் காம்பாக்ட் எஸ்யூவி முதல் முறையாக எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் வழங்கப்படுகிறது. வெர்னா , க்ரெட்டா , அல்காசர்  மற்றும் டக்சன் போன்ற மாடல்கள்  இந்த மாதத்தில் பலன்களுடன் கிடைக்காது என்பதையும் நினைவில் கொள்க.


Hyundai Exter தள்ளுபடி:


Hyundai இன் Tata Punch, Nissan Magnite மற்றும் Citroen C3 போட்டியாக உள்ள, எக்ஸ்டெர் மாடலுக்கு 10 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனசுடன் வருகிறது. Exter சராசரியாக ஒரு மாதத்திற்கு 8,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகிறது. மொத்தம் 17 டிரிம்களில் கிடைக்கிறது.  இதன் விலை ரூ.6.13 லட்சம் முதல் 10.28 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 83hp, 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இதில் சிஎன்ஜி ஆப்ஷனும் உள்ளது.


Hyundai Venue தள்ளுபடி:


வென்யூ காம்பாக்ட் SUV மீதான தள்ளுபடி கடந்த மாதத்தைப் போலவே ரூ.35,000 ஆயிரம் வரை தொடர்கிறது. இதில் ரூ.25,000 வரை ரொக்க தள்ளுபடி மற்றும் அதிகபட்சமாக ரூ.10,000 மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவை அடங்கும். எட்டு N லைன் டிரிம்கள் உட்பட மொத்தம் 32 வகைகளில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.7.94 லட்சம் முதல் 13.90 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 83hp, 1.2 லிட்டர் பெட்ரோல்,  120hp, 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல், மற்றும் 116hp, 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


Hyundai Grand i10 Nios தள்ளுபடி:


Grand i10 Nios ஆனது ரூ. 48,000 வரையிலான சலுகைகள பெறுகிறது. கடந்த மாதத்தை விட ரூ. 5,000 அதிகரித்துள்ளது. இதில்  ரூ. 3,000 கார்ப்பரேட் தள்ளுபடியும் அடங்கும். நான்காவது தலைமுறை மாருதி ஸ்விஃப்ட்டின் அறிமுகத்துடன், கிராண்ட் ஐ10 நியோஸ் விரைவில் கடுமையான போட்டியைக் காணப் போகிறது. 5.92 லட்சம் முதல் 8.56 லட்சம் வரையிலான விலையில், நியோஸ் அதன் 83hp இன்ஜின் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் விருப்பங்களை Exter உடன் பகிர்ந்து கொள்கிறது. சிஎன்ஜி டிரிம்கள் உட்பட மொத்தம் 14 டிரிம்களில்  நியோஸ் விற்பனை செய்யப்படுகிறது.


Hyundai i20 தள்ளுபடி:


ஹூண்டாய் i20 வாகனமானது வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் ரூ.45,000 வரையும், கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் ரூ.35,000 வரையும் தள்ளுபடி பெறுகிறது. i20 ஆனது அதே 83hp பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. ஆனால் மேனுவல் மற்றும் CVT ஆட்டோ ஆப்ஷன்களைப் பெறுகிறது. i20 N லைன் அதன் 120hp, டர்போ-பெட்ரோல் யூனிட்டை வென்யூ என் லைனுடன் பகிர்ந்து கொள்கிறது,  ஹூண்டாயின் பிரீமியம் ஹேட்ச்பேக் விலை ரூ.7.04 லட்சம் முதல் 12.52 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


பின்குறிப்பு: குறிப்பிட்ட மாடல்களுக்கான தள்ளுபடிகள் கையிருப்பை சார்ந்து நகரத்திற்கு நகரம் மாறுபடும்.


Car loan Information:

Calculate Car Loan EMI