2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 22 தொடங்கி 28 ஆம் தேதி நிறைவு பெற்றன. இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் செங்கல்பட்டு மாவட்டம் மிக மோசமான தேர்ச்சி சதவீதத்தை பெற்றுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தின் நிலை என்ன ?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தின் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை 363 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 79 பள்ளிகளில் மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை 15,192 மாணவர்களும் 14,927 மாணவிகளும் தேர்வு எழுதினர். மொத்தம் செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை 30119 மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர். இதில் 13,125 மாணவர்களும், 13927 மாணவிகளும் மொத்தம் 27052 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தம் தேர்ச்சி 89.82 சதவீதமாக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் 35 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 33-வது இடத்தில் இருந்த செங்கல்பட்டு மாவட்டம் இந்த முறை 35-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட அரசு பள்ளியின் நிலை என்ன ? Chengalpattu Government School Result
செங்கல்பட்டு மாவட்டத்தில் 146 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 14 அரசு பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 84.15 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு அரசு பள்ளியின் தேர்ச்சி 79 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் சற்று அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீத அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் 35 வது இடத்தை பிடித்து இருக்கிறது. கடந்தாண்டு 36-வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.