2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 22 தொடங்கி 28 ஆம் தேதி நிறைவு பெற்றன.
தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி அன்று தொடங்கி நடைபெற்றது. பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். இதுமட்டுமில்லாமல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளும் இன்று ம்தியம் 2 மணிக்கு வெளியாகவுள்ளது.
வெளியான முடிவுகள்:
இதன் அடிப்படையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வெளியாகியுள்ளது, இதில் 93.80 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவிகள் 4,17, 183 பேரும், மாணவர்கள் 4,00,078 தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களை விட 4.14 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விவரங்கள்:
- தேர்ச்சி பெற்றவர்கள் : 8,17,261 (93.80%)
- மாணவியர் 4,17,183 (95.88%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
- மாணவர்கள் 4,00,078 (91.74%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
- மாணவர்களை விட 4.14 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 15,652.
- கடந்த மார்ச் / ஏப்ரல் 2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,94,264. தேர்ச்சி பெற்றோர் 8,18,743 தேர்ச்சி சதவிகிதம் 91.55%.
- கடந்த மார்ச் / ஏப்ரல் 2024 பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 2.05% சதவிகிதம் கூடுதலாக உள்ளது.
டாப் 5 மாவட்டங்கள்:
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் அதிக தேர்ச்சி பெற்ற டாப் 5 மாவட்டங்கள்
1.சிவகங்கை - 97.49%
2.விருதுநகர் - 95.57%
3.கன்னியாகுமரி - 95.47%
4.திருச்சி - 95.42%
5.தூத்துக்குடி - 95.40%
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
மாணவர்கள் தங்களின் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்களுக்குச் சென்று அறிந்து கொள்ளலாம். தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை வைத்து உங்கள் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்
மேலும் results.digilocker.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் தேர்வர்கள் தேர்வு முடிவுகளைப் பெறலாம்.
பள்ளிகளில் பார்க்கலாம்
மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்றும் அறிந்துகொள்ளலலாம்.
குறுஞ்செய்தி வழியாகவும் காண முடியும்…
மாணவர்கள் தங்களின் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்ப்பட்டுள்ளது
தனித் தேர்வர்களுக்கு எப்படி?
தனித் தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கு, குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 91.55% பேர் தேர்ச்சி
முன்னதாக மாநிலக் கல்வி வாரியத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் 91.55% பேர் தேர்ச்சி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
துணை தேர்வுகள் எப்போது?
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணக்கர்களுக்கு வரும் ஜூலை 4 ஆம் தேதி துணைத்தேர்வுகள்நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.