2023ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 06.04.2023 முதல் 20.04.2023 வரையிலான நாட்களில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 5.01 லட்சம் மாணவர்கள், 4.75 லட்சம் மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை மாணவர்கள்

  www.tnresults.nic.in  ,  www.dge.tn.nic.in  ஆகிய இணையதளங்கள் மூலமாக அறிந்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


காஞ்சிபுரம் தேர்ச்சி  (  TN SSLC Result 2023 )


காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு 90.28% மாணவர் மற்றும் மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 2023 நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு தேர்வினை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக 8341 மாணவர்களும் 7943 மாணவிகளும் என மொத்தம் 16 ஆயிரத்து 284 மாணவர் மற்றும் மாணவிகள் அரசு தேர்வில் கலந்து கொண்டனர். இதில் 14,702 மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் சராசரியாக 90.28 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர் மாணவர்கள் 85.92 சதவீதமும் மாணவிகள் 94.86 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவிகள் மாணவர்களை விட 8.94 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.


மூன்று இடங்கள் முன்னேறிய காஞ்சிபுரம் ( Tamil Nadu SSLC Result 2023 )


காஞ்சிபுரம் மாவட்டத்தில் 184 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர் . இதில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 89 நகராட்சி பள்ளிகளின் எண்ணிக்கை 4 ஆதிதிராவிட நல பள்ளிகளின் எண்ணிக்கை 7, சமூக நலத்துறை பள்ளிகளின் எண்ணிக்கை இரண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 23 தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 59. அதில்  100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 42 ஆக உள்ளது. அதில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி எண்ணிக்கை 8.  காஞ்சிபுரம் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் 24 ஆவது இடத்தை பெற்றுள்ளது. அரசு பள்ளிகளின் சராசரி தேர்ச்சி விகிதம் 87.16 சதவீதமாக உள்ளது, மாநில அளவில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் 24 வது தரவரிசினை பெற்றுள்ளது. கடந்தாண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில், மாநில அளவில் 28 வது இடத்தில் இருந்த, காஞ்சிபுரம் 3 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 1. 80 சதவீதம் அதிகரித்துள்ளது.  


 


100 சதவீத தேர்ச்சி பெற்ற தேர்ச்சி பெற்ற 8 அரசு பள்ளிகளின் விவரம் பின்வருமாறு


 அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி சென்னாங்குப்பம்


அரசு உயர்நிலைப்பள்ளி காரை


அரசு உயர்நிலைப்பள்ளி வையாவூர்


அரசு உயர்நிலைப்பள்ளி புரசை


அரசு காது கேளாதோர் பள்ளி காஞ்சிபுரம்


அரசு உயர்நிலைப்பள்ளி மாகாண்யம்


அரசு உயர்நிலைப்பள்ளி பிச்சிவாக்கம்


அரசு உயர்நிலைப்பள்ளி காட்டரம்பாக்கம் ஆகிய பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளது.



அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 4  பள்ளிகளின் விவரம் பின்வருமாறு


சி எஸ் ஐ காஞ்சிபுரம்


ஆர் சி எம் உயர்நிலைப்பள்ளி காஞ்சிபுரம்


சென் ஜோசப் உயர்நிலைப்பள்ளி கண்டிகை


சாரா சேவா உயர்நிலைப்பள்ளி சின்னமாங்குளம் ஆகிய பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளது.


 பாடவாரியாக தேர்ச்சி விகிதம்


 தமிழ் மொழி பாடத்தில் தேர்ச்சி விகிதம் 93.93 சதவீதம் ஆங்கிலம் பாடத்தில் தேர்ச்சி விகிதம் 98.83 சதவீதம் பாடத்தில் தேர்ச்சி விகிதம் 95.82 சதவீதம் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி விகிதம் 95 27 சதவீதம் சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி விகிதம் 95.71% விருப்ப மொழி பாடத்தில் தேர்ச்சி சதவீதம் 100 ( 128மாணவர்கள் மட்டுமே விருப்பம் மொழி பாடத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து தேர்வு எழுதினர்.