10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, மாணவர்கள் மார்ச் 27ஆம் தேதி முதல் டவுன்லோடு செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணைப்பு மூலம் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம். 


10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்


தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியம் சார்பில் 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தொடங்குகின்றன. ஏப்ரல் 20ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். இந்த நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் மார்ச் 27ஆம் தேதி முதல் டவுன்லோடு செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணைப்பு மூலம் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம். 


10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை | 10th Exam Time Table 2022 Tamil Nadu


ஏப்ரல்  6ஆம் தேதி - தமிழ் (மொழித்தாள்)
ஏப்ரல் 10ஆம் தேதி - ஆங்கிலம் 
ஏப்ரல் 13ஆம் தேதி-  கணிதம்


ஏப்ரல் 15ஆம் தேதி- விருப்ப மொழித்தாள்
ஏப்ரல் 17ஆம் தேதி- அறிவியல்
ஏப்ரல் 20ஆம் தேதி- சமூக அறிவியல் 


ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?


* தேர்வு எழுதும் மாணவர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்


* தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை க்ளிக் செய்யவும். 


* தேவையான விவரங்களை உள்ளிட்டு, சப்மிட் பொத்தானைச் சொடுக்கவும்.


* 10ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டைக் காணலாம். 


* வருங்காலத் தேவைக்காக ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.


தேர்வு முடிவுகள் எப்போது?


12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதியும் வெளியாக உள்ளன. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே மாதம் 17ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவு மே19 ஆம் தேதியும் வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதையும் வாசிக்கலாம்: பிளஸ் 2 தேர்வில் 50 ஆயிரம் பேர் ஆப்சென்ட்: அதிமுக கேள்விக்கு புள்ளிவிவரங்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்


10ஆம் வகுப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய அனைத்து பாடங்களின் மாதிரி வினாத் தாள் மற்றும் 12ஆம் வகுப்பு மாதிரி வினாத் தாள்களைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.