மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் 30ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 


கரோனா வைரஸ் காரணமாகக் கடந்த 2 ஆண்டு கல்வி ஆண்டுகளாகப் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. பொதுத் தேர்வுகள் மற்றும் ஆண்டுத் தேர்வுகள் வழக்கத்தை விட தாமதமாக நடைபெற்றன. கொரோனா தொற்று வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து, நடப்புக் கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு கடந்த ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, 12-ம் வகுப்புக்கு ஜூன் 20-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு ஜூன் 27-ம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.


இதற்கிடையே அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், முதல் பருவத் தேர்வுகள் கடந்த மாதம் நடத்தி முடிக்கப்பட்டன. இந்த நிலையில், காலாண்டுத் தேர்வுக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. விரிவான காலஅட்டவணை மாவட்டம் வாரியாக பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 


செப்டம்பர் 23 முதல் 30 வரை காலாண்டுத் தேர்வு 


11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30 வரை காலாண்டுத் தேர்வு நடைபெறுகிறது. காலாண்டுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அக்டோபர் 1 முதல் 5ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. 


6, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. அதே நேரத்தில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி முதல், மதியம் 12 மணி வரை காலாண்டுத் தேர்வு நடக்கிறது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி முதல், மதியம் 12.30 மணி வரை காலாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. 


1- 10ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 23 முதல் 30 வரை காலாண்டுத் தேர்வு 


6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 26ஆம் தேதி மொழித் தாளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. செப்டம்பர் 27ஆம் தேதி ஆங்கில மொழிக்கான தேர்வும் செப்டம்பர் 28ஆம் தேதி கணிதப் பாடத்துக்கான தேர்வும் நடைபெறுகிறது. 




அதேபோல செப்டம்பர் 29ஆம் தேதி மேற்குறிப்பிட்ட வகுப்புகளுக்கு அறிவியல் பாடமும், செப்டம்பர் 30ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வும் நடக்க உள்ளன.  தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அக்டோபர் 1 முதல் 5ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அதை அடுத்து அக்டோபர் 6ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. 


பொதுத்தேர்வு போலவே காலாண்டுத் தேர்வு


உயர் வகுப்புகளான 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு போலவே காலாண்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள கல்வித் துறை, இதற்கான வினாத்தாள்களைத் தேர்வுத் துறை மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க உள்ளது. 


மேலும் வாசிக்க: Plus 2 exam results: பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் ஆக.22-ல் வெளியீடு: பதிவிறக்கம் செய்வது எப்படி? - https://tamil.abplive.com/education/tn-plus-2-supplementary-exam-results-on-august-22-know-how-to-download-68636/amp