தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


பள்ளிகள் திறப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,” பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சரின் கவந்த்திற்கு கொண்டு செல்லப்படும். அதன்பிறகு, நாளை பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் கோடை  வெயில் சதமடித்து வருகிறது. மாணவர்களுக்கு ஏப்ரல் 29 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பலரும் பள்ளிகள் திறக்கப்படும் தேதிவை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஆலோசனை கூட்டம்:


அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் தலைமையில் முதன்மை கல்வி அலுவலர்களுடன் வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த இணைய வழிக் கூட்டம் நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்தும், பள்ளித் தூய்மை, விலையில்லாப் பொருட்களை உடனே வழங்குவது, தமிழ் கட்டாய பாடம் என்பதை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் போன்ற கருத்துகளை அமைச்சர் வலியிறுத்தினார்.


கல்வியாண்டு விவரங்கள்


2023-24ஆம் கல்வியாண்டு நாட்காட்டியின்படி, 11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்குகிறது. 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்குகிறது. தேர்வு முடிந்து விடுமுறைக்குப் பிறகு, அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 


தள்ளிப்போகும் என்று வெளியான தகவல்


தமிழ்நாட்டில் கோடை  வெயில் சதமடித்து வருகிறது. மாணவர்களுக்கு ஏப்ரல் 29 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பு இருக்கும் என்று சமீபத்தில் அமைச்சர் தெரிவித்திருந்தார். 


6 முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதியும் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை ஜுன் மாதம் 5ஆம் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.


கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படும் தேதியை மாற்ற வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை வைத்திருந்தார். மேலும், பலரும் மாணவர்களின் நலன் கருதி அரசு தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.


இந்நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசித்த பிறகே முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.