10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (மார்ச் 2) காலை வெளியிட்ட நிலையில், தற்போது முழு தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. 

கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டும் கல்வி ஆண்டு பாதிக்கப்பட்ட சூழலில், பொதுத் தேர்வுகள் மே மாதம் தொடங்கி, அதே மாதத்தில் முடிகின்றன. . 10, 11, 12 ஆகிய 3 வகுப்புக்கான பொதுத் தேர்வுகளையும் சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். காலை 10 மணி முதல் மதியம் 1.15 வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. 

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் மே 30 வரை பொதுத்தேர்வு நடைபெறும். ஜூன் 17ல் முடிவு வெளியாகின்றன.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு ஏப்ரல் 25ம் தேதி தொடங்கும். மே 5 முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.  ஜூன் 23ஆம் தேதி அவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31ம் தேதி வரை பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. ஜூலை 7ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை | 10th Exam Time Table 2022 Tamil Nadu

மே  6 - மொழித்தாள்மே 14 - விருப்ப மொழித்தாள்மே 18- ஆங்கிலம்

மே 21- தொழிற்பாடம்மே 24- கணிதம்மே 26 - அறிவியல்மே 30- சமூக அறிவியல் 

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை | 12th Exam Time Table 2022 Tamil Nadu

மே 5 - மொழித்தாள்மே 9-  ஆங்கிலம்

மே 11 - ஆங்கிலம்மே 13- வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்மே 17 - கணிதவியல், விலங்கியல், நர்சிங்மே 20- இயற்பியல், பொருளாதாரம்மே 23- உயிரியல், வரலாறு, வணிகக் கணிதம்மே 28- தொழிற்பாடங்களுக்கான தேர்வுகள்.

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை | 12th Exam Time Table 2022 Tamil Nadu

மே 10- மொழித்தாள்மே 12- ஆங்கிலம்மே 19 - வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்மே 25- கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல்மே 27- தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், ஹோம் சைன்ஸ்மே 31- இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்

கோடை விடுமுறை

10ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்களும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்புக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட உள்ளது.