பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் சூர்யாவுடன் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் கதாநாயகியாக, பிரியங்கா மோகனன் நடித்துள்ள நிலையில், வில்லனாக நடிகர் வினய் நடித்திருக்கிறார். 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தத்திரைப்படம் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை தட்டிக்கேட்கும் நாயகனாக சூர்யா நடித்திருப்பதாக படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் கூறியிருக்கிறார். டி. இமான் இசையமைத்திருக்கும் இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
Etharkum Thuninthavan Trailer: ''வேட்டி கட்டினா நான்தான்டா ஜட்ஜ்''... வெறித்தனமாக வெளியான 'எதற்கும் துணிந்தவன்' ட்ரைலர்!
ABP NADU | 02 Mar 2022 11:17 AM (IST)
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
எதற்கும் துணிந்தவன்