எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு விண்ணப்பிக்க, தகு​தி​யான மாணவ, மாணவி​களின் தரவரிசைப் பட்​டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்பிரமணி​யன் இன்று (ஜூலை 25) வெளியிட்டார். கிண்டி​யில் உள்ள கலைஞர் நூற்​றாண்டு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது.

Continues below advertisement


எத்தனை இடங்களுக்கு?


கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 11,350 மருத்​துவ இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடை​பெற உள்ளது.


கலந்தாய்வு எப்போது?


மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டுக் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்​க உள்ளது.


யார் யார் எந்த இடம்?


அரசு ஒதுக்கீட்டு இடங்களில், சூர்ய நாராயணன் என்னும் மாணவர் 665 மதிப்பெண்களைப் பெற்று, ஒட்டுமொத்த அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, அபிநீத் நாகராஜ் என்னும் மாணவர் 655 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தை ஹ்ருத்திக் விஜய ராஜா என்னும் மாணவர் 653 மதிப்பெண்களை எடுத்து, பிடித்துள்ளார். தொடர்ந்து ராகேஷ் என்னும் மாணவர், 650 மதிப்பெண்களுடன் 4ஆம் இடத்திலும் பிரஜன் ஸ்ரீவாரி என்னும் மாணவர், 647 நீட் தேர்வு மதிப்பெண்களுடன் 5ஆம் இடத்திலும் உள்ளனர்.


7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் முதலிடங்களைப் பெற்றவர்கள்


அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், திருமூர்த்தி முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் 720 மதிப்பெண்களுக்கு 572 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். அடுத்ததாக, சதீஷ் குமார், 563 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். 551 மதிப்பெண்களைப் பெற்று, மதுமிதா என்னும் மாணவி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.


வகுப்புகள் எப்போது?


இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளதாக மருத்துவ கலந்தாய்வுக் குழு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.