அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கு நவம்பர் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டு உள்ள நிலையில், பணி அனுபவச் சான்று குறித்த முக்கிய அறிவிப்பை டிஆர்பி வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் காலிப்பணியிடங்களுக்கு 2708 உதவிப் பேராசிரியர்கள் ஏற்கனவே விண்ணப்பித்துள்ள, விண்ணப்பிக்கும் நிலையிலுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பணியனுபவ சான்றிதழ் சமர்ப்பித்தல் தொடர்பான கோரிக்கைகளின் அடிப்படையில் கல்லூரிக் கல்வி ஆணையரிடமிருந்து பெறப்பட்ட தெளிவுரையின்படி கீழ்க்கண்டவாறு பிற்சேர்க்கை (Addendum) வெளியிடப்படுகிறது.

  1. பணி அனுபவச் சான்று பதிவேற்றம் (Experience Certificate)

அறிவிக்கை எண். 04/2025 நாள். 16.10.2025இல் Annexure-IVஇல் உள்ள பணியனுபவச் சான்றிதழில், உரிய அலுவர்களிடம் கையொப்பம் பெற்ற பின்பு, அச்சான்றிதழில் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் [திட்டம் மற்றும் வளர்ச்சி] அவர்களின் ஒப்புதல் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து அவர்களின் நலன் கருதி "Certificate approved by Joint Director (P&D), Directorate of Collegiate Education, Chennai" என்பதை நீக்கம் செய்து கீழ்க்கண்டவாறு Annexure IV, Annexure V மற்றும் Annexure-VI-இல் பணியனுபவச் சான்றிதழ்கள் மற்றும் உரிய அறிவுரைகள் (Instructions) வழங்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

Annexure IV - அரசு / அரசு உதவிப்பெறும் / தனியார் கலை மற்றும் அறிவியல் / மருத்துவம் / பொறியியல் / கல்வியல் கல்லூரிகளில் பணிபுரிவர்களுக்கான பணியனுபவச் சான்றிதழ்

Annexure V - இந்தியப் பல்கலைக்கழகம் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சான்றிதழ் பணிபுரிவர்களுக்கான பணியனுபவச் சான்றிதழ்

Annexure-VI - வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிவர்களுக்கான பணியனுபவச் சான்றிதழ்கள்

எனவே, மேற்குறிப்பிடப்பட்டுள்ள Annexure-IV, Annexure V மற்றும் Annexure-VI-இல் கொடுக்கப்பட்டுள்ள பணியனுபவச் சான்றிதழ்கள் மற்றும் அவை சார்ந்து தெரிவிக்கப்பட்டுள்ள (Instructions) உரிய அலுவலரிடம் கையொப்பம்/ சான்றொப்பம் பெற்று பதிவேற்றம் செய்யுமாறு விண்ணப்பதாரர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://trb1.ucanapply.com/register?sub_id=eyJpdiI6IjE2RmxadEs0RDVpZzkzWk1qNmNhWEE9PSIsInZhbHVlIjoiOTdLL3V2VXllQVVsSGF6UVJSNHl1Zz09IiwibWFjIjoiNmQzN2NiNjdlZDZlMDU3MGFlMDFmOTIxYzA5NDdjYTYwZTg4MTEyYzU2MWZlOGQyZWMwMDQ3MGM0YTQ5YjE0MSIsInRhZyI6IiJ9 என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

இ மெயில் முகவரி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.

சப்மிட் பொத்தானை அழுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://trb.tn.gov.in/admin/pdf/8098279381AP_compressed.pdf என்ற இணைப்பில் உள்ள அறிவிக்கையைக் காண வேண்டும்.