அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்க்கவும், குழுவாக இணைந்து செயல்படக்கூடிய திறனைக் கற்றுக் கொள்ளவும், படைப்பாற்றலை வளர்க்கவும் 15 மாவட்டங்களில் தலா ஒரு எந்திரவியல் ஆய்வகம் என்ற கணக்கில் 15 எந்திரவியல் ஆய்வகங்கள் ரூ. 6.09 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டு உள்ளன.
இந்த எந்திரவியல் ஆய்வகங்களின் (Robotic Labs) துவக்க விழா இன்று திருச்சி மாவட்டம் துவாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
சிறப்பம்சங்கள்:
Ø இதற்கான பாடத்திட்டம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்டு உள்ளது.
Ø இப்பாடத்திட்டத்தில் வகுப்பு ஒன்றுக்கு 11 வகையான உபகரணங்கள் வாயிலாக 10 பரிசோதனைகள் உருவாக்கப்பட்டு 90% செய்முறை கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
Ø இதன் மூலம் 15 அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் விரைவில் Multi-functional Robotics, STEM Workstation Powered by Prototyping Virtual Labs, Colour Sorter Programmable Robotics, Smart Dustbin Programmable Robotics, Hungry Robot Programmable Robotics, Life Size Voice Controlled Robot, DRONE இயக்கம் மற்றும் அடிப்படை மின்னணுவியல் ஆகிய தலைப்புகளில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Robotics Lab பாடத்திட்டமானது, மாணவர்களின் கற்றல் திறனில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
Ø தொழில்நுட்பத் திறன்: எளிய மின்சுற்றுகள் (Simple circuit), பிரட்போர்டு (Breadboard) பயன்பாடு மற்றும் சென்சார்கள் (Sensors - Ultrasonic, Gas sensor) ஆகியவற்றைக் கையாள்வதன் மூலம் மின்னணுவியல் மற்றும் பொறியியல் சார்ந்த அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள இயலும்.
Ø படைப்பாற்றல் மற்றும் வடிவமைப்பு சிந்தனை: "Solar House", "Frog Bot DIY", "Smart Dustbin", "Carnival Ride" போன்ற திட்டங்கள் மாணவர்களின் கற்பனைத் திறனையும், ஒரு பொருளை புதிதாக வடிவமைக்கும் (Design Thinking) திறனையும் ஊக்குவிக்கும்.
Ø சிக்கல் தீர்க்கும் திறன் (Problem Solving): "Obstacle avoiding", "Line Follower Robot" போன்ற தானியங்கி இயந்திரங்களை உருவாக்கும்போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்வதன் மூலம் அவர்களின் பகுப்பாய்வு திறன் மேம்படும்.
Ø இன்றைய நவீன உலகம் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபாட்டிக்ஸ் துறையை நோக்கி நகர்கிறது. இவ்வகுப்புகள் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களாக உருவெடுக்கத் தேவையான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும்.
Ø மேற்கண்ட பள்ளிகள் அதனை சுற்றியுள்ள இதர பள்ளிகளுக்கு HUB பள்ளியாகச் செயல்பட்டு மற்ற பள்ளிகளின் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
Ø ஆண்டு இறுதியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயிலாகச் செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
எனவே, இந்த எந்திரவியல் ஆய்வகங்கள் வெறும் தொழில்நுட்பப் பயிற்சி மட்டுமல்ல; இது மாணவர்களின் சிந்தனை முறையையே மாற்றக்கூடிய ஒரு முழுமையான கல்வித் திட்டமாகும். இது அரசுப்பள்ளி மாணவர்களை நாளைய உலகின் சவால்களை எதிர்கொள்ளத் தயார் செய்து, திறன்மிக்க படைப்பாளர்களாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.