செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அரசு கலைக்கல்லூரி அமைய வேண்டும் என 25 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், கலைக் கல்லூரி அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


புதிய அரசு கலைக் கல்லூரிகள்


தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில் முக்கிய அறிவிப்புகளை தங்கம் தென்னரசு வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில், புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களால் தமிழ்நாட்டில், மாணவ மற்றும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தேவைகளை நிறைவேற்றும் வகையில், நீலகிரி மாவட்டம் குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சென்னை மாவட்டத்தில் ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், சிவகங்கை மாவட்டம் மானாம, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் , பெரம்பலூர் மற்றும் மாவட்டத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.


25 ஆண்டு கால கோரிக்கை 


செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என 25 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். செய்யூர் தாலுகாவில் 84 ஊராட்சிகள் உள்ளன. 


செய்யூர் தாலுகாவில் கல்லூரிகள் இல்லாததால் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மமாணவியர்கள், செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் வரையில் நீண்ட பயணம் மேற்கொண்டு கல்லூரிகளுக்கு சென்று நிலை இருந்து வருகிறது. நாள் நாள் ஒன்றுக்கு 30 கிலோமீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை பயணம் செய்து, தங்களது கல்லூரி படிப்பை படித்து வருகின்றனர். இந்தநிலையில் 25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறி இருப்பது, அப்பகுதி மக்களிடையே மிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை அறிவியல் மையம்


மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையை வளர்த்திடவும், இளைய தலைமுறையினருக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளைத் தொடர்ந்து அறிமுகம் செய்திடும் நோக்கோடு, சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட சென்னை அறிவியல் மையம் உருவாக்கப்படும். 


இம்மையத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் (STEM) புலங்கள் மட்டுமன்றி, விண்வெளி, வானவியல் துறைகளின் மெய்நிகர் மாதிரிகளும் இடம்பெற்றிருக்கும். குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா, நவீன வானவியல் தொலைநோக்கு வசதிகள், ஆழ்கடல் உயிரினங்கள் மற்றும் வானவியல் நகர்வுகளை ஆழ்ந்து உணரக்கூடிய டிஜிட்டல் திரை அனுபவ அரங்குகள். அறிவியல் மாநாட்டுக் கூடங்கள், பார்வையாளர்களுக்கான பசுமைப் புல்வெளிகள் என அனைத்து வசதிகளுடன் கூடிய பிரமாண்ட சென்னை அறிவியல் மையம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் அரசு பங்களிப்புடன் உருவாக்கப்படும்.