தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். மதுபான ஊழல் குறித்து அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க அவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், பட்ஜெட் உரையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாசிக்க தொடங்கியபோதும், அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் அப்பாவு கூறியும், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

அவர்கள் பேசுவது அவைக்குறிப்பில் இடம்பெறாது என சபாநாயகர் அப்பாவு அறிவித்த நிலையில், அதிமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையை தொடர்ந்து வாசித்தார்.