= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
தங்கபாலு, ரூபி மனோகரனுக்கு நெல்லை போலீசார் சம்மன் ஜெயக்குமார் மரண வழக்கு விவகாரத்தில் கே.வி. தங்கபாலு மற்றும் ரூபி மனோகரனுக்கு நெல்லை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
TN 12th Result 2024 LIVE: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்த செங்கல்பட்டு மாணவி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் செங்கல்பட்டைச் சேர்ந்த சாய் தர்ஷினி எனும் மாணவி 597 மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளார். இவர் தமிழில் 98 மதிப்பெண்களையும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களையும் எடுத்துள்ளார். இதனைத் தவிர, பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல் மற்றும் வணிக கணக்குவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை அசத்தியுள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
TN 12th Result 2024 LIVE: கை கொடுத்த நான் முதல்வன் திட்டம் - HCLல் வேலைக்கு சேர்ந்த பிளஸ் 2 மாணவி நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக பயிற்சி பெற்ற சேலம் மாநகராட்சிப் பள்ளி மாணவி சிவானிஸ்ரீ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்த கையோடு HCL நிறுவனத்தில் பணி கிடைத்துள்ளது. இவர் 569 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பிடித்துள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
TN 12th Result 2024 LIVE: வெளியானது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - மறுகூட்டலுக்கு நாளை விண்ணப்பிக்கலாம் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் விடைத்தாள் நகல் / மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாக நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
மாணவர்கள் துவண்டு போக வேண்டாம் - ஏபிபி நாடு தோல்வி தொடர் கதையும் இல்லை, வெற்றி கடினமும் இல்லை.. விடாமல் விரட்டுங்கள், வெற்றியை வெல்லுங்கள்!.. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற தவறிய மாணவர்கள், உடனடியாக நடைபெற உள்ள துணைதேர்வு வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து.. தேர்வு முடிவுகள் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். மதிப்பெண்கள் குறைவாக பெற்று உடனடித் தேர்வுகள் எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் தேர்வுகளை எதிர்கொள்ளவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். வெற்றி பெற்ற மாணவர்கள் என்றில்லாமல் தேர்வு எழுதிய அனைத்து மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு துணை நிற்கும்” என பதிவிட்டுள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
திருவள்ளூர் மாவட்ட தேர்ச்சி விகிதம் திருவள்ளூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில், 91.32 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
நாளை முதல் துணைதேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்கள், நாளை முதலே துணை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கும் நாளை முதலே விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்? 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியானதை தொடர்ந்து, வரும் 9ம் தேதி முதல் மாணவர்களுக்கு அவரவர் படித்த பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனப்படும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
மாற்றுத்திறனாளிகள் 92.11% பேர் தேர்ச்சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 5 ஆயிரத்து 603 மாற்றுத்திறனாளி மாணாக்கர்கள் எழுதினர். அவர்களில் 5 ஆயிரத்து 161 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
இருபாலர் பள்ளிகளில் தேர்ச்சி அதிகம் ஆண்கள் பள்ளிகளை விட இருபாலர் பள்ளிகளில் பயின்றவர்களின் தேர்ச்சி விகிதம் 5.8 % அதிகம். ஆண்கள் பள்ளி தேர்ச்சி விகிதம் – 88.98
இருபாலர் பள்ளி தேர்ச்சி விகிதம – 94.78
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பாடவாரியான தேர்ச்சி விகிதம்.. இயற்பியலில் 98.48 சதவிகிதம் பேரும், வேதியியலில் 99.14 சதவிகிதம் பேரும், உயிரியலில் 99.35 சதவிகிதம் பேரும், கணிதத்தில் 98.57 சதவிகிதம் பேரும், தாவரவியலில் 98.86 சதவிகிதம் பேரும், விலங்கியலில் 99.04 சதவிகிதம் பேரும், கணினி அறிவியலில் 99.80 சதவிகிதம் பேரும், வணிகவியலில் 97.77 சதவிகிதம் பேரும், கணக்குப் பதிவியலில் 96.61 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
115 சிறைவாசிகள் தேர்ச்சி தேர்வெழுதிய 125 சிறைவாசிகளில் 115 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
மொத்த சதங்கள் எத்தனை? ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் மொத்த எண்ணிக்கை - 26 ஆயிரத்து 352
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பாட வாரியாக சதம் விளாசியவர்கள் எண்ணிக்கை..! தமிழில் 35 பேரும், ஆங்கிலத்தில் 7 பேரும், இயற்பியலில் 633 பேரும், வேதியியலில் 471 பேரும், உயிரியலில் 652 பேரும், கணிதத்தில் 2 ஆயிரத்து 587 பேரும், தாவரவியலில் 90 பேரும், விலங்கியலில் 382 பேரும், கணினி அறிவியலில் 6 ஆயிரத்து 996 பேரும், வணிகவியலில் 6 ஆயிரத்து 142 பேரும், கணக்குப் பதிவியலில் ஆயிரத்து 647 பேரும், பொருளியலில் 3 ஆயிரத்து 299 பேரும், கணினிப் பயன்பாடுகளில் 2 ஆயிரத்து 251 பேரும், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியலில் 210 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
எண்ணிக்கை அடிப்படையில் தேர்ச்சி விகிதம் மொத்தமாக 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 பேர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளனர். அவர்களின் மாணவர்கள் 3 லட்சத்து 52 ஆயிரத்து 165 பேரும், மாணவியர்கள் 4 லட்சத்து 8 ஆயிரத்து 440 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
100 சதவிகித தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எண்ணிக்கை.. மாநிலம் முழுவதும் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 2,478. அதில் 397 அரசுப்பள்ளிகள் அடங்கும்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு.. கடந்த ஆண்டை விட இந்த முறை 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 0.53 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில், 97.45 சதவிகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அதைதொடர்ந்து, ஈரோடு மாவட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் 97.42 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன. அரியலூர் மாவட்டம் 97.25 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 91.2 சதவிகிதமும், தனியார் பள்ளி மாணவர்கள் 96.7 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 95.49 சதவிகிதமும், மகளிர் பள்ளிகளில் 96.39 சதவிகிதமும், ஆண்கள் பள்ளிகளில் 86.96 சதவிகிதமும், இருபாலர் பள்ளிகளிகளில் 94.7 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
தேர்ச்சி விகிதத்தில் மாணவிகள் முதலிடம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 96.44 சதவிகிதமும், மாணவர்கள் 92.37 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
வெளியானது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்... 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்வு எழுதியவர்களில் 94.56 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
இன்னும் சற்றுநேரத்தில் முடிவுகள்... 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடுகின்றனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
முடிவுகள் அறிய தேவையான விவரங்கள்? மாணவர்கள் அரசு அறிவித்த இணையதள முகவரிகளை அணுகி, ஹால் டிக்கெட் எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தங்களது தேர்வு முடிவுகளை அறியலாம்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
கடந்த ஆண்டு சாதனை..! கடந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், திருவண்ணாமலையைச் சேர்ந்த நந்தினி என்ற பெண், 6 பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எடுத்து வரலாற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
குறுஞ்செய்தி வாயிலாகவும் மாணவர்கள் முடிவுகளை அறியலாம்..! அரசு தரப்பு இணையதள முகவரிகள் வாயிலாக மட்டுமின்றி, மாணவர்கள் பள்ளிகளில் வழங்கிய பெற்றோரின் தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்திகளாக அனுப்பப்படும். இதுபோக, நூலகம், பள்ளிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் சென்று மாணவர்கள், தங்களது தேர்வு முடிவுகளை அறியலாம்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
தேர்வு முடிவுகள் வெளியீடு எங்கே? 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள், மே 6ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் வெளியாகின்றன. குறிப்பாக சென்னை, நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
விடைத்தாள் திருத்தும் பணி விடைத்தாள் திருத்தம் பணி ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 13ஆம் தேதி வரை, 86 மையங்களில் திருத்துதல் பணிகள் நடைபெற்றன.இறுதியாக, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து, மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றும் பணிகளும் நடைபெற்று முடிந்துள்ளன.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
தேர்வு எழுதிய 7.8 லட்சம் மாணவர்கள் தமிழ்நாடு மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவர்கள் எழுதினர். குறிப்பாக 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேர் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதினர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் மாற்றம் Tamil Nadu 12th Result 2024 : 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளை, இன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை வெளியிடுகிறது. இதனை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர் இன்றி, அதிகாரிகளே தேர்வு முடிவுகளை வெளியிடுவார்கள் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.