அக்னி நட்சத்திரம்:



வழக்கமாக கோடை காலம் என்றாலே வெயில் சுட்டெரிக்கும். அதுவும் அக்னி நட்சத்திர காலத்தில் தமிழ்நாட்டில் வெயில் மிக கடுமையாக வாட்டி வதைக்கும். பஞ்சாங்கத்தில் பரணி 3 ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை தான் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நீடிக்க உள்ளது. அதேசமயம், கடந்த மார்ச் மாதம் முதலே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. ஈரோடு, வேலூர் போன்ற மாவட்டங்களில் ஏற்கனவே வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வெப்ப அலையும் வீசி வருகிறது.  

 



 

அந்த வகையில்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வெப்ப காற்று வீசி வந்த நிலையில் மேலும் வெப்பம் அதிகமாகி கத்திரி வெயில் தொடங்கியதும் பொதுமக்கள் முதியோர் குழந்தைகள் என வெயிலில் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டன. மேலும் மாலை வேலைகளில் ஆன்மீக தலங்கள் மற்றும் பூங்காக்களுக்கு பொதுமக்கள் படையெடுத்துச் சென்று பொழுது போக்கியும் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ளவும், இது போன்ற பரந்து விரிந்த இடங்களைத் தேடி பொதுமக்கள் வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள நேரிட்டன. 



 திடீரென கருணை காட்டிய  மழை


 

வானிலை அறிக்கை கோடை மழை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகி நிலையில் இன்று இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளான கோவிந்தவாடி அகரம் கூறும் வெள்ளை கேட் திம்ம சமுத்திரம் ஒளி முகமது பேட்டை சிறு காவிரிப்பாக்கம் அம்பி போன்ற இடங்களில் கன மழை இடி மின்னலுடன் கூடிய மழையானது 20 நிமிடத்திற்கு மேலாக பேதமையால் சற்று வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருகின்றன இவற்றால் காஞ்சிபுரம் சுற்றுலா பகுதியில் உள்ள பொதுமக்கள் வெப்ப அனல் காற்றில் இருந்து மாறுபட்டு ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



கோடை காலத்திற்கான சில டிப்ஸ்:



  • மதிய நேரத்தில் (12.00P.M-3.00P.M ) வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். 


  • அவசியம் இல்லையெனில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கலாம்


  •  தாகம் எடுக்கவில்லை என்றாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.


  •  அதிக உடலுழைப்பு தேவைப்படும் வேலைகளை மதிய நேரங்களில் செய்வதைத் தவிர்க்கவும்.


  •  வெளியே செல்லும்போது எப்போதும் ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துச்செல்வதை பழக்கமாக்கி கொள்ளவும்.
     குளிர்பானங்கள், தேநீர், காபி, மது போன்றவற்றை குடிப்பதை தவிர்க்கவும்.


  •  உடல் சோர்வுற்றலோ அல்லது காய்ச்சல் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும்.


  •  மோர், எலுமிச்சை தண்ணீர் போன்ற வீட்டில் செய்யும் பானங்களைப் பருக வேண்டும். அதிகம் சர்க்கரை உள்ள கடைகளில் கிடைக்கும் குளிர்பானங்கள் வேண்டாம்.


  • பருத்தி ஆடைகளை அணியலாம். காற்றோட்டமான உடைகள் அணிவது நல்லது. 


  • காலை, இரவு என இரண்டு வேளையும் குளிக்கலாம். அதிகம் ரசாயனம் கலந்த சோப்களை பயன்படுத்த வேண்டாம்.


  • இயற்கையான கடலை மாவு, பயித்த மாவு வகைகளை குளிக்க பயன்படுத்தலாம்


சிட்ரஸ் சத்து மிகுந்த பழங்கள்


எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, நெல்லிக்காய் உள்ளிட்ட பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த வகை பழங்களைச் சாப்பிடலாம். உடலுக்குக் குளிர்ச்சி ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிடுவது நல்லது