Karnataka Election: மக்கள் ஆதரவு யாருக்கு? கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை தொடக்கம்..

கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

Continues below advertisement

நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் நேற்று  மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வத்ரே உள்ளிட்டோர் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

Continues below advertisement

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்குமான பொதுத்தேர்தல் நாளை (மே 10-ஆம் தேதி) நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. ஒருவர் பெரும்பான்மையை பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கர்நாடகாவில் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்கு அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அத்துடன் முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி களத்தில் 217 வேட்பாளர்களை அறிவித்து தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அனைத்து கட்சி தரப்பில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா தான், இதனால் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என அக்கட்சி தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பிரதமர் மோடி பல முறை கர்நாடகாவிற்கு வருகை தந்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக ஏழு முறையும் அதற்கு முன் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஏழு முறையும் பயணம் மேற்கொண்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தரப்பில் சோனியா காந்தி உப்பள்ளியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டார். ராகுல் காந்தி தொடர்ந்து கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஒப்பந்த தொழிலாளர்களுடன் மசாலா தோசை சாப்பிட்டுக்கொண்டு கலந்துரையாடியது, பைக் ரைய்டு, பேருந்தில் பயணம் என வித்தியாசமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதேபோல் பிரியங்கா காந்தி வத்ரே முதல் முறையாக கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே சிவகுமார், எதிர்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் மாநிலம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினர். ஜனதா தளம்  வேட்பாளரை ஆதரித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரச்சாரம் மேற்கொண்டார். கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தான் போட்டியிடும் தொகுதியில் நேற்று கடைசியாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

அனைத்து கட்சி தரப்பிலும் தீவிர பிரச்சாரம் நடத்தப்பட்ட நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இதையடுத்து சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை (புதன்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் நாளை வாக்களிக்க உள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola