மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.93% ஆகும். தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 22 வது இடம் பெற்றுள்ளது. மதுரையில் 482 பள்ளியில் 168 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
TN 10th Result 2025: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
2024 - 25 -ஆம் கல்வி ஆண்டுக்கான 10 -ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 28 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 -ஆம் தேதி வரை நடைபெற்றது. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 22 -ம் தேதி தொடங்கி 28 -ஆம் தேதி நிறைவு பெற்றது. தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் 21 -ஆம் தேதி அன்று தொடங்கி நடைபெற்றது. பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். அதுமட்டுமில்லாமல் 11 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது.
10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள்
2025ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 16) வெளியான நிலையில், இதில் 93.80% தேர்ச்சி விகிதம் பதிவாகி உள்ளது. குறிப்பாக, மாணவர்கள் 8,17,261 பேர் (93.80%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 4.17,183 (95.88%) பேரும் மாணவர்கள் 4,00,078 (91.74%) பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட 4.14 மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்விற்கு வருகை புரியாதவர்கள் எண்ணிக்கை 15,652 ஆக உள்ளது.
முதலிடம் பிடித்த சிவகங்கை மாவட்டம்
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த இடத்தில் விருதுநகர் மாவட்டம் உள்ளது. 3ஆம் இடத்தில் தூத்துக்குடி மாவட்டமும், அடுத்தடுத்த இடங்களில் முறையே கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களும் பெற்றுள்ளன. வழக்கமாக ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் முதலிடங்களைப் பெறும். எனினும் இந்த முறை கொங்கு மண்டலம் கோட்டை விட்டுள்ளது.
மதுரை மாவட்ட நிலை என்ன தெரியுமா..?
மதுரை மாவட்டத்திலிருந்து நடப்பாண்டு 18584 மாணவர்கள், மாணவிகள் 19042 என 37626 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், 17013 மாணவர்களும், 18329 மாணவிகள் என மொத்தம் 35342 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 91.55 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.17 ஆகும். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.93% ஆகும். தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 22 வது இடம் பெற்றுள்ளது. மதுரையில் 482 பள்ளியில் 168 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்ச்சி விகிதமும் சிறப்பாகவே அமைந்துள்ளது