அதிரடியில் இறங்கிய மத்திய அரசு:
இந்தியாவின் பல பகுதிகளில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்களை கண்டறிந்து கைது செய்து, அவர்களைத் திருப்பி அனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளது மத்திய அரசு! இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வங்கதேசத்துக்கு ஏற்கெனவே தெரியப்படுத்தியுள்ளது. ஆதாரங்களைச் சரிபார்த்த பின்பு தங்களது நாட்டு மக்களைத் திரும்ப அழைத்துக்கொள்ளச் சம்மதித்துள்ளனர்.
உரிய நடவடிக்கை எடுப்போம்
"ஆளுநர் வழக்கு விவகாரத்தில் குடியரசுத் | தலைவர் உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டது தொடர்பாக நேற்றே அறிக்கை வெளியிட்டேன், மற்ற மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து, கருத்துகள் கேட்டு உரிய நடவடிக்கை எடுப்போம்" -உதகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மனம் திறந்த ரவி சாஸ்திரி
"விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு |அறிவிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் அவரிடம் பேசினேன். கிரிக்கெட்டுகாக அனைத்தையும் கொடுத்துவிட்டேன்' என ஓய்வில் மிகவும் உறுதியாக அவர் இருந்தார்.அவருக்கு எந்த வருத்தமும் இல்லை.ஓரிரு கேள்விகளை மட்டும் எழுப்பினேன். ஆனால் அதற்கும் அவர் மிகத் தெளிவாக விளக்கமளித்தார். அப்போதுதான் 'இதுதான் சரியான நேரம்' என எனக்கும் தோன்றியது"இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டான் பிக்சர்ஸ் நிறுவன உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கான் வீட்டில் சோதனை; அமரன், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் ஆகாஷ் பாஸ்கரன்; 2 வாகனங்களில் வந்த 5 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழு சோதனையில் ஈடுபட்டனர்.
"தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்திய ஆளுநர்"
ஊழல் துணைவேந்தர் ஜெகன்னாதனுக்கு பிரிவு உபசார விழா நடத்திய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.ஏன்.ரவி தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார் -அமைச்சர் கோவி.செழியன் கண்டனம்
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் - DRDO சாதனை
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கடல் நீர் சுத்திகரிப்புக்கான உயர் அழுத்த நானோதுளை பாலிமெரிக் வடிகட்டியை DRDO வெற்றிகரமாக 8 மாதங்களில் உருவாக்கி சாதனை.இந்திய கடலோர காவல்படை கப்பல்களில் கடல் நீர் சுத்திகரிக்கும் ஆலைகளில் இத்திட்டம் பயன்படுத்தப்படும் என எதிர்பார்ப்பு.
கைதிகளுக்கு மட்டும் கழிவறைகள் வழுக்குமா?"
காவல் நிலைய கழிவறைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா; கழிவறைகளை பயன்படுத்தும் ஆய்வாளர்களுக்கு மட்டும் எதுவும் ஆவதில்லை ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி.கை, கால் முறிவுக்கு சிகிச்சை வழங்கக்கோரி ஜாகிர் உசேன் தந்தை தொடர்ந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது
ஜம்மு-காஷ்மீர்:புல்வாமாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளிடமிருந்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன டிரால் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை; சுட்டுக்கொல்லப்பட்ட 3 பேரிடமிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ட்ரம்ப் விமர்சனத்தை நீக்கச் சொன்ன பாஜக தலைமை
"அமெரிக்க அதிபர் ட்ரம்பை விமர்சித்து போட்ட பதிவை பாஜக தேசிய தலைவர் நட்டா உத்தரவின்பேரில் நீக்கிவிட்டேன். என்னுடைய தனிப்பட்ட கருத்தை பதிவிட்டத்தற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன்"-கங்கனா ரனாவத். இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்ய வேண்டாம் என அதன் CEO டிம் குக்கிடம் கூறியதாக பேசிய ட்ரம்பை கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தார் கங்கனா.
மழைக்கு வாய்ப்பு:
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 13 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.