தந்தை உயிரிழந்த சோகத்திலும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவன் பொறியாளர் ஆகி தந்தையின் ஆசையை நிறைவேற்றுவேன் என உறுதியெடுத்துள்ளார்.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் திபீஸ். பாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். சமூக அறிவியல் தேர்வு அன்று தந்தை லட்சுமணன் திடீரென்று மாரடைப்பு உயிரிழந்தார். தந்தை உயிரிழந்த சோகத்திலும் மனம் தளராமல் சமூக அறிவியல் பொதுத் தேர்வு எழுதினார். 




இன்று வெளியான பொது தேர்வு முடிவு 306 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தந்தை உயிரிழந்த அன்று எழுதிய சமூக அறிவியல் தேர்வு 46 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.