10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான மொத்த தேர்ச்சி சதவிகிதத்தை கல்வித் துறை வெளியிட்டது. அதில் 10 ஆம் வகுப்பு தேர்வில் தமிழகத்தில் மொத்தமாக 9,12,620 பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதில் 4,52,499 பேர் மாணவியரும், 4,60,120 பேர் மாணவர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் ஆவர். இதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரத்தை பொறுத்தவரை மாணவியர் 4,27,073 பேர் என 94.38% பேரும், மாணவர்கள் 3,94,920 பேர் என 85.83 % பேரும் என மொத்தமாக 8,21,994 பேர் என 90.07 % பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நெல்லை, சேரன்மகாதேவி, வள்ளியூர் ஆகிய கல்வி மாவட்டங்களை உள்ளடக்கியது. இதில் 10 ஆம் வகுப்பு தேர்வு 91 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 96 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேட்டை தடுக்க மாவட்டம் முழுவதும் 156 நிலையான பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதோடு மாவட்டம் முழுவதும் மொத்தம் 1892 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டனர். இந்த சூழலில் வெளியான தேர்வு முடிவில் நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு தேர்வில் மொத்தமாக 23,290 பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதில் 11,805 பேர் மாணவியரும், 11,485 பேர் மாணவர்களும் ஆவர். இதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரத்தை பொறுத்தவரை மாணவியர் 11,171 பேர் என 94.63% பேரும், மாணவர்கள் 9,488 பேர் என 82.61% பேரும் என மொத்தமாக 20659 பேர் என 88.70 % பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
12 ஆம் வகுப்பு தேர்வில் தமிழகத்தில் மொத்தமாக 8,06,277 பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதில் 4,21,622 பேர் மாணவியரும், 3,84,655 பேர் மாணவர்களும் ஆவர். இதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரத்தை பொறுத்தவரை மாணவியர் 4,06,105 பேர் என 96.32% பேரும், மாணவர்கள் 3,49,893 பேர் என 90.96% பேரும் என மொத்தமாக 7,55,998 பேர் என 93.76 % பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். குறிப்பாக நெல்லையில் 182 பள்ளிகளில் 73 மையங்கள் அமைக்கப்பட்டன. 10 மையங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டிய மையங்களாக தேர்வு செய்யப்பட்டு தேர்வு நடைபெற்றது, மேலும் இந்த தேர்வில் 361 தனித்தேர்வர்கள் மற்றும் 7 பேர் பாளையங்கோட்டை மத்திய சிறை வாசிகள் ஆகியோர் தேர்வு எழுதினர்.
இன்று வெளியான 12 ஆம் வகுப்பு தேர்வில் நெல்லை மாவட்டத்தில் மொத்தமாக 20,090 பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதில் 10,999 பேர் மாணவியரும், 9091 பேர் மாணவர்களும் ஆவர். இதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரத்தை பொறுத்தவரை மாணவியர் 10,796 பேர் என 98.15% பேரும், மாணவர்கள் 8,505 பேர் என 93.55% பேரும் என மொத்தமாக 19,301 பேர் என 96.07% பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
மொத்தமாக நெல்லையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்