12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி முடிவுகளில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீத அடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் முதலிடத்தில் உள்ளனர்.

Continues below advertisement


பிரிவு வாரியாக தேர்ச்சி சதவீதம்:


அறிவியல் பாடப்பிரிவு மாணவர்கள் 95.51 சதவீதமும், வணிகவியல் பாடப்பிரிவு மாணவர்கள் 92.51 சதவீதமும், கலைப்பிரிவு மாணவர்கள் 85.13 சதவீதமும், தொழிற்பாடப் பிரிவுகள் 84.26 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயற்பியல் பாடத்தில் 96.47 சதவீதமும், வேதியியல் பாடத்தில் 97.96 சதவீதமும், உயிரியியல் பாடத்தில் 96.89 சதவீதமும், கணிதம் பாடத்தில் 97.29 சதவீதமும், தாவரவியில் பாடத்தில் 95.34 சதவீதமும், விலங்கியல் பாடத்தில் 96.01 சதவீதமும், கணினி அறிவியல் பாடத்தில் 99.39 சதவீதமும், வணிகவியல் 96.31 சதவீதமும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 93.76 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.